பக்கம் எண் :

New Page 1

754

             சிறுதேர்ப் பருவம்

“பச்சைமா ஏழும் ஏறப்போய் ஆறும் ஏறினார்” என்று கம்பரும், “ஏழு வயப்புரவி ஊரும் இரதத்து இரவி” என்று வில்லிபுத்தூராரும் கூறுதலால் அறியலாம்.

    தவம் என்பது காவி உடுத்தும் தாழ் சண்ட வைத்தும் காடுகள்புக்கும் வாழ்தல் என்பது மட்டும் அன்று,  தவமாவது யாது என்பதை விளக்க வந்த இடத்துப் பரிமேலழகர்,  “மனம் பொறிவழி போகாது நிற்றல் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்குதலும், கோடைக்கண் வெயிலில் நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து, பிற உயிர்களை ஓம்புதல், புலால் மறுத்து உயிர்கள் மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது” என்று எழுதியுள்ளனர்.  தவத்திற்குச் சிறந்த பண்பு அருளே ஆகும்.  இதனைத் திருவள்ளுவர்,

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு

என்றனர். இதனை மேலும் வற்புறத்த, “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து  விடின்”  என்றும்  கூறித்  தவத்திற்கு  வெளிவேடம்  வேண்டா என்றும் கூறுதல் காண்க.  தவத்தினை “அருளுடைய அருந்தவம்” என அடை கொடுத்துப் பேசி இருப்பதையும் காண்க.  அருள் பண்பு இருந்தால்தான் தவம் இனிதாகும் என்பதைச் சிறுபஞ்ச மூலம்,

    உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல்
    செயிர்நோய் பிறர்கண் செய்யாமை-செயிர்நோய்
    விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
    இழிவன் றினிது தவம்

என்று கூறுகிறது.  இத்தகைய தவம் எவர்க்கும் கிட்டாது. இதன் அருமையினை உணர்ந்தே திருவள்ளுவர்.

755