தவ
தவமும் தவமுடை
யார்க்குஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள்
வது
என்றும், “நோற்பார்
சிலர், பலர் நோலாதார்” என்றும் கூறியுள்ளனர். மேலும,் தவத்தின் பெருமை இத்தன்மைத்து என்பதையும்
திருவள்ளுவர்,
ஒன்னார்த் தெறலும்
உவந்தார் ஆக்கலும்
எண்ணின் தவத்தான்
வரும்
என்றும்,
வேண்டிய வேண்டியாங்கு
எய்தலால் செய்தவம்
ஈண்டும் முயலப் படும்
என்றும்,
கூற்றம் குதித்தலும்
கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்
டவர்க்கு
என்றும் கூறுதல் காண்க.
இவற்றை எல்லாம் உளங்கொண்டே, “மேதகவுறுந்தவம்” என்று கூறினார் ஆசிரியர்.
அருளின் விளக்கத்திற்கு
அன்பின் தொடர்பு இன்றியமையாததாகும். அருள் இன்னது என்பதைப் பரிமேலழகர் விளக்கும்போது,
“தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை” என்றனர். மணக்குடவர்,
“அருளுடைமை யாவது யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின், அதற்குத் தன் உயிர்க்கு உற்ற துன்பத்தினால்
வருந்து மாறு போல வருந்தும் ஈரமுடைமை ஆகும்” என்று விளக்கினர். காளிங்கர் விளக்கம்
தரும்போது, “அனைத்துயிர்க்கும் ஒப்ப நிகழ்வதாகிய அருளில்வழி, மற்றவர் செய்யும் தவம் வஞ்சனை
உடைத்தாய் அஞ்சத் தக்கதாகலானும் துறவறம் பூண்பார்க்கு நிறை அருள் வேண்டும்” என்றனர்
அன்பினைப் பற்றி
விளக்கம் தரவந்த பரிமேலழகர், “வாழ்க்கைத் துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கண்
காதல் உடையன் ஆதல், இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள் பிறத்தலும் அன்பின்பயன்
|