படர
படர் செய்பகையும் உறவாக்கும்
பற்றும் அளிக்கும் மனை மைந்தர் தொடர்பின் வளர்க்கும் அன்பதனால் சோர்ந்தும் அன்பின்
வழுவற்க” என்று கூறுகிறது. இவ்வன்பு இன்றேல் எதனாலும் பயனின்று என்பதையும் அப்புராணம்,
“இடனும் பொருளும் ஏவலரும் இருந்து பயன் என்னே வந்த உடலின் பயனாகிய அன்பை உறாத இடத்து” என்றும்
கூறுகிறது. இத்தகைய பெருமைகட்கு நிலைகளனாம் அன்பு, அருள் என்னும் அன்பு ஈன் குழவி என்பது திருவள்ளுவர்
கருத்தாதலின், ஈண்டுப் பிள்ளை அவர்கள் அருள் விளக்கத்தினுக்கு உழுவலும் என்றனர். உழுவல் என்பது
எழுபிறப்பும் தொடரும் பேரன்பாகும். அருளுக்கும் அன்பிற்கும் அமைந்த தொடர்பின் மாட்சியினை
நமது சேக்கிழார் பெருமானார்,
“முட்டில் அன்பாதம்
அன்பிடும்
தட்டுக்கும் முதல்வர்
மட்டும் நின்றதட்
டருளொடும்
தாழ்வுறும்
வழக்கால்
பட்டொ டுந்துகில்
அநேககோ
டிகள்இடும் பத்தர்
தட்டு மேற்படத்
தாழ்ந்தது
கோவணத் தட்டு”
என்று பாடிக் காட்டி
இருத்தல் காண்க. இப்பாட்டில் அடியார் அன்பின் முன் அரனார் அருள் தாழ்ந்தே நிற்கும் என்னும்
அரிய குறிப்பு அமைந்திருத்தல் காண்க.
கல்வியினைக் கற்றுவிட்டால்
மட்டு பயன் இல்லை. நுண்ணறிவுடன் கற்றலே பெரும் பயன் தருவதாகும். கல்வி இன்னது என்பதைப்
பரிமேலழகர் குறிப்பிடும்போது “தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல்” என்கின்றனர். மணக்குடவர்
“கல்வியாவது கல்வியாலும் அதனினாகிய பயனும் கூறுதல்” என்றனர். கல்வியின் பயனை அறநெறிச்சாரம்.
“எப்பிறப் பாயினும்
ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பில்
பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும்
கேட்டதற்கண்
நிற்றலும் கூடப் பெறின்”
|