என
என்கிறது. மோட்சநிலைக்கும்
கல்வி இன்றி அமையாத நிலையினை,
“எழுத்தறிய தீரும்
இழிதகமை தீர்ந்தால்
பொழித்திறத்தின்
முட்டறுப்பான் ஆகும்-மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன்
முதல்நூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்”
என்னும் பாடல் கூறுதல்
காண்க.
“கைப்பொருள் கொடுத்தும்
கற்றல், கற்றபின் கண்ணும் ஆகும்” என்று சீவகசிந்தாமணியிலும், திருவெங்கைக் கோவையில்,
விண்ணுடை யார்புகழ்
நூபுரப் பாதர்வெல் வேல்நெடும்
கண்
பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை
மாநகர்ப்
பெண்ணணங்கே
கண்ணடை யார்கற்
றவரேகல் லார்கள் முகத்திரண்டு
புண்ணுடை யார்எனக் கூறிநம்
காதலர் போயினரே
என்றும், கீழ்நிலையினரும்
மேல் நிலையினைக் கல்வியால் பெற்று உயர்வர் என்பதைப் புறம்,
வேற்றுமை தெரிந்த
நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன்
கற்பின்
மேற்பால் ஒருவனும்
அவன்கண் படுமே
என்றும், நாலடியார்
களர்நிலத் தும்பிறந்த
உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின்
விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோர் ஆயினும்
கற்றறிந் தோரை
தலைநிலைத்து வைக்கப்
படும்
என்றும், கல்வியே எப்பொருளினும்
சிறந்தது என்பதைத் திருவள்ளுவர்,
|