இத
இத்தகைய கல்வியின்
பயன் இன்னது என்பதைத் திருவள்ளுவர் கூறவந்தபோது,
“யாதானும் நாடாமால்
ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத
வாறு”
என்று கூறி, ஏன் கற்கவில்லை
எனவும் வினவலானார். இவ்வாறு கற்றவர்க்கு எங்கும் சிறப்புண்டு என்பதே, “எத்திசைச் செலினும்
அத்திசை சோறே” என்றும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் புறத்து வருதலாலும்,
ஆற்றவும் கற்றார்
அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத
நாடில்லை அந்நாடு
வேற்றுநா டாகா தம்வேயாம்
ஆதலினான்
ஆற்றுணா வேண்டுவ தில்
என்று பழமொழி நானூறும்,
“மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று
வாக்குண்டானும் கூறுதலால் அறியலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியினை ஒரு பிறவியில் கற்றால்,
அஃது ஏழு பிறப்பிலும் தொடர்ந்து பயன்தரும் என்பது வள்ளுவர் கருத்து. இக் கல்வியின் பயனை அறியவே
அனுமான் சூரியனிடம் சென்றான் என்பதை இரங்கேசவெண்பா,
மல்லல் வியாகரணம்
மாருதிகற் கக்கருதி
எல்லவன்பின் போந்தான்
இரங்கேசா
என்று குறிப்பிடுகிறது.
இங்ஙனம் கற்றற்குரிய
பயன் கற்றபடி நிற்றலே ஆகும்.
கற்க கசடறக் கற்பவை
கற்றபின்
நிற்க அதற்குத் தக
|