வ
விடாமல், நன்றின்
இடத்தே சொல்லும்படி செய்வதும் ஆகும். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின்
மெய்ப்பொருள் காண்பதே நுண்ணறிவாகும். வில்லிபுத்தூராரும் நுண்ணறிவைப்பற்றி,
எவ்வுரை எவர்சொற்
றாலும்
தன்னறி வேற
நோக்கி
அவ்வுரை உண்மை
அன்மை
அறிபவர் அறிவுளோராம்
என்கிறார்.
பிறர் வாய்ச்
சொல்லின் நுண்பொருளைக் காண்பதும் நுண்ணறிவு என்றும், உலகத்தோடு ஒட்டி வாழ்வதே நுண்ணறிவு என்றும்,
எவ்வது உறைவது உலகம்
உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
என்னும் குறள் கூறுதலையும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லாரைப் பல கற்றும் கல்லாத அறிவீனர் என்றும் கூறுதல் காண்க. அஞ்சுவனவற்றிற்கு
அஞ்சுவதே அறிவுடைமையாகும். நுண்ணறிவுடையவர்தாம் எல்லாம் உடையர். அஃது இல்லாதவர் எவற்றை
உடையவராயினும் உடையவர் ஆகார் என்பர் வள்ளுவர். இத்தகைய நுண்ணறிவு மிகுதியாக இருத்தல் வேண்டும்
என்ற கருத்தில்தான் “நுண்ணறிவுவீக்கம்” என்றனர் திரு. பிள்ளை அவர்கள்.
கல்வியிருந்தாலும்
அக் கல்வியினால் நுண்ணறிவும் இருந்தாலும் போதாது. அந்நுண்ணறிவிற்கு ஏற்ற ஒழுக்கம் இருத்தல்
மிக மிக இன்றியமையாதது. இதனால் தான் அதனை இறுதியில் வைத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
ஒழுக்கமாவது யாது என்பதைப்
பரிமேலழகர் உணர்த்தும்போது, “தத்தம் வருணத்தார்க்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை
உடையவர் ஆதல்” என்றனர்.
|