வ
வாயால் கூறுதற்கும் அச்சம்
உண்டாகும். ஆகவே, ஒழுக்கம் சிறப்புக்குரியது என்ற நிலையினை அறுதியிட்டு உறுதியாகக் காட்டவே
இறுதியில் கூறினர் என்க.
ஈண்டுத் திரு.
பிள்ளை அவர்கள் ஒன்றிற்கு ஒன்று இன்றியமையாதனவற்றை எடுத்துக் காட்டியதன் கருத்து, பிறவி நோய்
நீங்கவிழைவார்க்குத் திருத்தொண்டர் புராணம் மிகமிக இன்றியமையாதது என்பதைக் காட்டுதற்காகவே
என்க. அத்தகைய இன்றியமையாத புராணத்தைப் பாடிய பெருந்தகையாரே சிறுதேர் உருட்டுக என்று வேண்டுவராயினர்.
பிறவி நோய் போக
வேண்டுவதாயின், அருள்வழி ஒழுகினால் அன்றி, அதனை ஒழிக்க முடியாது. அருள்வழி ஒழுகுதலாவது இறைவன்
திருவருளைப்பற்றி நிற்றலாகும். இதனைத் திருவள்ளுவர்,
“அறவாழி அந்தணன்தாள்
சேர்ந்தார்க் கல்லால்
பிறவழி நீந்தல்
அரிது”
“பிறவிப் பெருங்கடல்
நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”
என்றும் கூறித் தெளிவு
படுத்தியுள்ளனர். இறைவனது திருவடிகளைப் பற்றிப் பிறவிநோய் தீர்ப்பதைச் சீவக சிந்தாமணி
“நவைசெய் பிறவிக் கடலகத்துள் பாதகமலம் தொழுவேங்கள்” என்றும் “ஆழ்கடல் புணையின் அன்ன அறிவரண்
சரண் அடைந்தான்” என்றும், மணிமேகலை,
அறஇயல் கிழவோன்
அடிஇணை ஆகிய
பிறவி என்னும்
பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய்
என்றும், பெரிய புராணம்
இணையில் பவம்கிளர்
கடல்கள்
இகந்திட
இருதாளின்
புணைஅருள் அங்கணர்
என்றும் திருவிளையாடல்புராணம்,
|