பக்கம் எண் :

New Page 1

 

       சிறுதேர்ப் பருவம்

765

“பாதமலர் எழுபிறவிக் கடல்நீந்தும்
     புணைஎன்பர் பற்றிலாதோர்”

என்றும் கூறுதலால் உணரலாம்.  இவற்றை உட்கொண்டே “அருள்வழிச் செலீஇ நோய்ப் பிறவி போக்குவார்” என்றனர்.  நோய்ப்பிறவி என்பதைப் பிறவிநோய் என மாற்றிக் கொள்ளவும்.

    இறைவனது திருவடியே பிறவிக் கடலை நீந்தி முத்திக் கரை அடைதற்குரிய வழி என்பதை அநுபவத்துடன் மணிமொழியார்,

    தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
        தடம்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
    கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
        கலக்குண்டு காமவான்சுறவின் வாய்ப்பட்டு
    இனிஎன்னே உய்யுமாறு என்றென் றெண்ணி
        அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
    முனைவனே முதலந்தம் இல்லா மல்லல்
        கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே

என்றதும் காண்க.

    நோற்றவர் புராணமாவது சரியை கிரியை முதலான’ நால்நெறி நின்று முத்திபெற்ற அடியவர்களின் வரலாறு.  இத்திருத்தொண்டர் புராணம் பிறவி நோயினைப் போக்க விழைவார்க்கு மிகமிக இன்றியமையாதது என்று கூறி இப்புராணத்தின் ஏற்றத்தை உணர்த்தியுள்ளனர் ஆசிரியர்.

    பெரிய புராணம் பிறவிநோய் தீர்க்கத்துணையாகும் என்பதைப் பல இடத்தும் சேக்கிழார் வாக்கால் உணரலாம்.  இயற்பகை நாயனார் புராணத்துள்,

வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட் டுடன்உறை பெருமை
                                        பெற்றார்
எனைய சுற்றத் தாரும் வானிடை இன்பம் பெற்றார்

என்றும், சண்டேசுர நாயனார் புராணத்துள்,