வ
விடாப்பிடிக்கு உடும்பு உவமையினைக் காட்டிய முதல் புலவர் திருத்தக்கதேவர். இது சீவக சிந்தாமணியில்,
தணக்கிறப் படுத்தபோதும்
தான்அளை விடுத்தல்செல்லா நிணப்புடை உடும்பு அன்னார்
என்று வருதலைக் காணலாம்.
இதே உவமையினைச் சேக்கிழார் கண்ணப்ப நாயனார் புராணத்துள் “வங்கினைப் பற்றிப் போகாவல்லுடும்
பென்ன நீங்கான்” என்று எடுத்து ஆண்டுள்ளனர். இதுவும் சிந்தாமணியினைத் தழுவியதுதானே. இவ்வாறு
உவமை காட்டியவர் திருத்தக்க தேவரைத் தவிர்த்து வேறு எப்புலவர் இலர். ஆகவே, சேக்கிழார்
பெருமானார் தம் உள்ளத்தில் தீதுடையரானால் சிந்தாமணியின் கருத்தைத் தழுவிப்பாடி இருப்பரோ?
இரார். “தீது அகம் மதித்திடா’ என்னும் அடைச் சிறப்பைப் பொதுவாக வேளாளர் குலத்துக்கு ஏற்றிக்
கூறினும் பொருத்தமே.
நற்றி றம்புரி பழையனூர்ச்
சிவத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் உயிரையும்
வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையும்
தூக்கிஅச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது
பெருந்தொண்டை நாடு
என்று வரும்பாடலில்
வேளாளர், தாம் சொன்ன சொல் தவறாது உயிர் கொடுத்தனர் என்பதைப் பார்க்கிறோம்.
உள்ளத்தில் தீமை
இருக்குமாயின் சொன்ன சொல்லினைத் தவறி இருப்பர் அல்லரோ. அடுத்தாற்போல,
ஆணை யாம்என நீறுகண்
டடிச்சேரன் என்னும்
சேணு வாவுசீர்ச் சேரனார்
திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கள்
மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது
பெருந்தொண்டை நாடு
என்ற பாட்டில், ஒரு பெண்ணைச்
சேர நாட்டார் வளர்த்து அதனைத் தொண்டை நாட்டு வேளார்கட்கு மணம் முடித்து கொடுக்கச் சேரநாட்டிற்கும்
தொண்டை நாட்டிற்கும் உறவு முறை கொள்ளப்பட்டது. மைத்துனக் கேண்மை நிலைநாட்
|