என
என்பது இந்திரலோகத்தில்
உள்ள குதிரை. அயிராவதம் என்பதும் இந்திர லோகத்தில் உள்ள யானை. இவ்விரண்டும் திருப்பாற்
கடலில் தோன்றியவை. இரண்டும் வெண்ணிறமுடையவை. ஐயிராவதம் இரண்டாயிரம் தந்தங்களையுடையது.
இதன்மேல் இந்திரன் ஊர்ந்து செல்வன். இறைவனுக்கு உரிய யானை ஐராவணம் எனப்படும். இதனை
அப்பர் “ஐராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி” என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு உணர்கின்றோம். இதற்கு
நாலாயிரம் தந்தங்கள் உண்டு.
ஈண்டுத் திரு
பிள்ளை அவர்கள், வேதிய செய்யும் வேள்வியில் எழும் புகை வெண்ணிறமுடைய உச்சைச் சிரவம் என்னும்
வெள்ளைக் குதிரையின் நிறத்தையும், ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் நிறத்தையும் கருமை ஆக்கியதாகவும்,
அவ்வாறே அப்புகை கற்பக விருட்சத்தின் இயற்கைத் தன்மையினை மாற்றியதாகவும் கூறிப் புகையின்
மிகுதிப் பாட்டை விளக்கியுள்ளனர். புகையின் மென்மைத் தன்மையினைப் பூம்புகை எனப் புகைக்கு
அடை கொடுத்துப் பேசினர். மெல்லிய ஆடைக்குப் பூம்புகையினை உவமை கொடுத்துப் பேசுவர் நம்
முன்னோர். இப்புகை தேவலோக விலங்குகளையும், மரத்தையும் மட்டும் வேறு படுத்தியதோடு நில்லாமல்,
தேவலோகம் முழுவதும் பரவி இமை கொட்டாத அரம்பை மாதர் கண்களிலும் புகுந்து, அவர்கள் கண்களையும்
இமைக்கும்படி செய்ததாம்.
ஈண்டுத் திரு
பிள்ளை அவர்கள் யாகப் புகை வானாடு அளவு சென்றதை “மேல் போய பூம் புகை’ என்றானர். இக்கருத்துக்
கந்த புராணத்தில் வரும.்
பூசு காந்தமும் நானமும்
பொய்கையில்
வாச நீர்எங்கும்
ஆகி மணம்கமழ்ந்
தாசை எங்கும் உலாவிஅவ்
வானவர்
நாசி யூடு மடுத்து
நடந்தவே
என்னும் பாட்டைப்
போன்றது என்க. ஈண்டு நீரின் மணம் தேவர்களின் மூக்கைத் துளைத்தது எனப்பட்டது. திரு பிள்ளை
|