பக்கம் எண் :

என

 

       சிறுதேர்ப் பருவம்

775

என்று பாடப்பட்டிருப்பது காண்க. சூரியன் வரத் தாமரை மலரும் என்பது பலமுறை கூறப்பட்டதை ஈண்டு நினைவு கூர்க.

    தாமரை  போன்ற  முகம்,  முகம்போன்ற  தாமரை  என்ற  குறிப்பை  மிக்க அழகு பொருந்த கம்பர்,

செய்யதா மரைகள் எல்லாம்
    தெரிவையர் முகங்கள் பூத்த
தையலார் முகங்கள் எல்லாம்
    செய்ய தாமரை பூத்த அன்றே

என்று பாடினார்.

    தாமரைக் குளத்தில் மாதர்கள் நீராடத் தம் முகங்களை மட்டும் மேலே காட்டித் தம் உடம்பு நீரில் மறையக் காட்சி தந்த குறிப்பே இவ்விரு அடிகளின் கருத்தாகும்.”

    நீர் தன்னிடம் கலக்கும் பொருள்களால் தன்னிலை கெடும் என்பதையும் கம்பர்,

ஆன தூயவ ரோடுடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர் நன்றரோ
தேனும் நாவியும் தேக்ககில் ஆவியும்
மீனும் நாறின வேறினி வேண்டுமோ

என்று பாடியுள்ளனர்.  நீரின் மாற்றத்தை வேறு முறையிலும் கம்பர்,

கதம்ப நாள்விரை கள்ளவிழ் தாதொடும்
ததும்பு பூந்திரைத் தண்புனல் சுட்டதால்
நிதம்ப பாரத்தோர் நேரிழை காமத்தால்
வெதும்பு வாள்உடல் வெப்பம் வெதுப்பவே

என்று பாடி இருத்தலையும் காண்க.

மாதர்கள் நீராடிக் கொண்டிருக்கையில் ஏதேனும் காரணம் காட்டிக் கரை ஏறுதல் இயல்பு. கந்தபுராண ஆசிரியராம் கச்சியப்ப சிவாசாரியார் மாதர் கரையேறியதற்குக் கூறும் காரணம்.