பக்கம் எண் :

தத

776

             சிறுதேர்ப் பருவம்

தத்தையை அனைய சொல்லாள்
    ஒருத்திதன் நீழல் தன்னை
அத்தடம் தன்னில் நோக்கி
    அளியனை அறியா தீண்டோர்
மைத்தடம் கண்ணி னாளை
    மருவினை என்று கேள்வன்
கைத்தலம் தன்னை விட்டு
    வெகுண்டனள் கரையில் போனாள்.

என்பதாம்.

    இத்தகைய காவியச் சுவை ததும்பும் நிலையை உட்கொண்டுதான் திரு. பிள்ளை அவர்கள், “மது முழுக்க, வீழ்ந்தே எழுங்குங்குமத் தோள் இணைந்த முலையார்கள் கன இரதம் அன்று என்று நீங்க” என்றனர்.

    இப்பாடலில் திரு. பிள்ளையவர்கள் மலர்த்தேனின் மிகுதியினைப் புலப்படுத்துகின்றனர்.  மாதர்கள் குளத்தில் நீராடுகின்றனர்.  அந்நீர் நீராக இன்றித் தேனாக இருந்தது.  இதற்குக் காரணம் குளக்கரையில் இருந்த மரம் தன்னகத் துள்ள மலர்வழி தேனைக் குளத்தில் பொழிந்ததால் என்க.  இதனை உணர்ந்து மாதர்கள் குளத்தில் நீராடுதலை விடுத்துக் கரை ஏறினர். மாதர்கள் நீர் நிலைகளில் நீராடும் சிறப்பினைச் சுந்தரனார் “தையல் மடவார்கள் உடையவிழக் குழல் அவிழக் கோதை குடைந்தாடக் குங்குமங்கள் உந்தி வரும் கொள்ளிடத்தின் கரைமேல்” என்று பாடியுள்ளது கொண்டு உணரலாம்.  நீரில் அன்னங்கள் திளைத்தலையும் சுந்தரர், “அரும்புயர்ந்த  அரவிந்தத் தனிமலர்கள் ஏறி, அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே” எனப் பாடி யிருக்கும் அழகைக் காண்க.  இதனைத்தான் “ஓதிமம் ஆங்கண் எய்திப் படிந்துதுளையா” என்றனர்.

    மாதர்கள் கரை எறியதொடு இன்றி, அன்னங்களும் குளத்தில் படிந்து தம் உடல் முழுதும் தேன்மயமாக நனைந்து இருக்கக் கண்டு, “்என்னே வெண்ணிற மேகம் நீர் மழை