பக்கம் எண் :

8

778

             சிறுதேர்ப் பருவம்

8.     வெங்கடிய ஆணவ மலக்குருட் டிருள்உளம்
           வெரீஇப் பதறிஓட் டெடுக்கும்
       வெண்ணீறு சாதனம் விழைந்தவர்தம் முககமலம்
           மேவுற் றொருங்க மலரும்
       பங்கமுற மேவுபர சமயர்வாய் ஆம்பல்பல
           வும்துயர்அ மைந்து குவியும்
       பரவுவே தாகம புராணம்எனும் மங்கலப்
           பணைமிக் கெழுந்தொ லிக்கும்
       அங்கலுழும் மாதரார் ஊடலின் எறிந்தகுழை
           அன்றித் தடுப்பார் இலர்
       அவைகளையும் அகலுற அகற்றினேம் மண்ணகத்
           தமைய எழுகின்ற தாய
       செங்கதிர் எனச்சொலச் சேவையர் குலாதிபன்
           சிறுதேர் உருட்டி யருளே
       சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்
           சிறுதேர் உருட்டி யருளே.

    [அ.சொ.] வெங்கடிய-மிகக் கடிய, உளம்-மனம் வெரீஇ-அஞ்சி, பயந்து, ஓட்டெடுக்கும்-விரைந்தோடும் சாதனம்-அடையாளம், விழைந்தவர்-விரும்பியவர், பங்கம் இழிவு, சேறு, ஆம்பல் - ஆம்பல் மலர், சைவர்கட்குச் சாதனம் விபூதி உருத்திராக்கம், பரவு-போற்றும், ஆகமம்-சைவர்கட்குரிய சைவ ஆகமம், பணை வாத்தியம், ஊடலில்-கணவனுடன் சிறு பிணக்கம் கொண்டபோது, குழை - காதணி, மண்ணகத்து-பூலோகத்தில், செங்கதிர்-சூரியன்.

    விளக்கம்: ஆணவ மலத்தின் தன்மை இன்னது என்பதை, “அறிவு தொழில் இச்சையினைத் தடுக்கும் ஆணவம் ஒன்று” என்று சிவநெறிவிளக்கமும், “ஏகமாய்த் தம் கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் இருள் ஒளிர இருண்ட மோகமாய்ச் செம்பின் உறுகளிம் பேய்ந்து நித்த மூலமலமாய அறிவு முழுதினையும் மறைக்கும்” என்று சிவப் பிரகாசமும்,