பக்கம் எண் :

கன

78

             காப்புப் பருவம்

    கன்னிதன் வனப்புத் தன்னைக்
        கண்களால் முடியக் காணார்
    முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
        மொய்க்கருங் குழலின் பாரம்
    மன்னிய வதன செந்தா
        மரையினில் கரிய வண்டு
    துன்னிய ஒழுங்கு துற்ற
        சூழல்போல் இருண்டு தோன்ற

    பாங்கணி சுரும்பு மொய்த்த
        பனிமலர் அளகப் பந்தி
    தேங்கமழ் ஆரம் சேரும்
        திருநுதல் விளக்கம் நோக்கில்
    பூங்கொடிக் கழகின் மாரி
        பொழிந்திடப் புயற்கீழ் இட்ட
    வாங்கிய வான வில்லின்
        வளர்ஒலி வனப்பு வாய்ப்ப

    புருவமென் கொடிகள் பண்டு
        புரம்எரித் தவர்தம் நெற்றி
    ஒருவிழி எரியின் நீறாய்
        அருள்பெற உளனாம் காமன்
    செருஎழுந் தனுவ தொன்றும்
        சேமவில் ஒன்றும் ஆக
    இருபெருஞ் சிலைகள் முன்கொண்
        டெழுந்தன போல ஏற்ப

    மண்ணிய மணியின் செய்ய
        வளர்ஒளி மேனி யாள்தன்
    கண்ணிணை வனப்புக் காணில்
        காமரு வதனத் திங்கள்
    தண்ணளி விரிந்த சோதி
        வெள்ளத்தில் தகைவின் நீள
    ஒண்ணிறக் கரிய செய்ய
        கயல்இரண் டொத்து லாவ