தவம
தவம்பெருக்கும்
சண்மையிலே
தாவில்சரா
சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும்
பிள்ளையார்
திருவவதா ரம்செய்தார்
என்னும் பாடல்களைப்
படிக்க. இக் கருத்தினை மனத்தில் கொண்டே திரு பிள்ளை அவர்கள், “வெண்ணீறு சாதனம் விழைந்தவர்
தம் முக கமலம்மே வுற்று ஒருங்குமலரும் பங்க முற மேவு பரசமயர்வாய் ஆம்பல்பலவும் துயர் அமைந்து
குவியும் என்று கூறுயுள்ளனர்.
ஈண்டு வேதம், ஆகமம்,
புராணம் என்பன மங்கள வாத்தியங்களாக குறுப்பிடப்பட்டன. வேதம் பொது நூல். ஆகமம் சிறப்பு
நூல். இந்த உண்மையினை,
வேதமோ டாகமம் மெய்யாம்
இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்
றுள்ளன
நாதன் உரைஅவை நாடில்
இரண்டந்தம்
பேதமே தென்பர் பெரியோர்க்
கபேதமே
என்ற திருமூலர் வாக்கைக்
கொண்டு உணரலாம்.
வேதங்கள் அறத்தைப்பற்றி
ஓதுபவை. இதனை,
வேதத்தை விட்ட
அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம்
உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர்
வளமுற்ற
வேதத்தை ஒதியே
வீடுபெற் றார்களே
என்றும்,
ஆகமம் இறைவன் திறம்
பேசவல்லது என்பதை,
அண்ணல் அருளால்
அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண்
கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன்
விருப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள்
ஏத்துவன் நானே
என்றும் திருமந்திரம்
வேதாகம உண்மைப் பொருளை விளக்குதல் காண்க.
|