பக்கம் எண் :

கண

 

சப்பாணிப் பருவம்

377

கணான்-பிரமன், தேந்துழாயவன்-தேன்பொருந்திய துளசி மாலையணிந்த திருமால், நண்ணிய-பொருந்திய, நேர்-ஒப்பு, நவில-கூற, பரம-மேலான, நயக்க-விரும்ப, தண்ணிய-குளிர்ந்த, ஐய-தலைவரே, பேரழகுடையவரே.

    விளக்கம் :  ஈசன் திருவருள் அடியவர்கள் எண்ணியபடி அருளுவதே ஆகும்.  திருநாவுக்கரசர் இறைவனிடம் தாம் சமண சமயத்தில் சேர்ந்ததனால் மாசுண்ணப்பட்டமையினால், அம்மாசு நீங்க இறைவரிடம் வேண்டினார் என்பதைச் சேக்கிழார்,

        புன்னெறியாம் சமண்சமயத்
            தொடக்குண்டு போந்தஉடல்
        தன்னுடனே உயிர்வாழத்
            தரியேன்நான் தரிப்பதனுக்கு
        என்னுடைய நாயக ! நின்
            இலச்சினைஇட் டருள்என்று
        பன்னுசெழுந் தமிழ்மாலை
            முன்னின்று பாடுவார்

என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இஃது உண்மை என்பதை அப்பர் வாக்காகிய,

        பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
            விண்ணப்பம் போற்றி செய்யும்
        என்னாவி காப்பதனுக் கிச்சை
            யுண்டேல் இருங்கூற் றகல
        மின்னாரும் மூவிலைச் சூலம்
            என்மேல் பொறிமேவு கொண்டல்
        துன்னார்க டந்தையுள் தூங்கானை
            மாடச் சுடர்க் கொழுந்தே

கடவும் திகிரி கடவா தொழியக் கயிலை யுற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய் பனிமால் வரை
                                        போல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாய்இருஞ்
                                        சோலை திங்கள்
தடவும் கடந்தை யுள்தூங் கானைமாடத் தெம்தத் துவனே

என்ற பாடல்களால் தெரியலாம்,