பக்கம் எண் :

 

       சிறுதேர்ப் பருவம்

785

காரணத்தால் முறிவுறாது வன்மையுடன் திகழும் என்பதாம்.  பிள்ளையாரைத் தேவர்கள் நினைத்து வழிபடாத காரணத்தால்தான் அவர்கள் பொருட்டு முப்புராதிகளை அழிக்கச் சிவபெருமான் ஏறிச்சென்ற தேரின் அச்சு முறியுமாறு விநாயகர் செய்தனர் என்ற குறிப்பினையும் உள்ளத்தில் கொண்டே, “அச்சு முதல் வலியவே” என்று குறிப்பிட்டனர் என்க.

    விநாயகர் சிவபெருமான் ஏறியிருந்த தேரின் அச்சு முடியச் செய்ததை அருணகிரியார், “முப்புரம் எரி செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா” என்றனர்.

    “நீறு இல்லா நெற்றி பாழ்” என்று ஒளவையார் கூறி இருத்தலின், நீறு நெற்றிக்கு இன்றியமையாதது ஆயிற்று அத்தகைய நீற்றை அணியும் பேற்றினை “நெற்றி பெற்ற மையின், அதனை நல்நுதல்” என்றனர்.  திருநீறு ஒளியுடையது என்பது முன்பே விளக்கப்பட்டது.  குழை என்பது காதணி.  மணி என்பது உருத்திராக்க மாலை.  நலம் கொள்மாமணி.  என்றதன் காரணம், அக்க மணியின் சிறப்பினைக் காட்ட ஆகும்.  அக்க மாலையின் சிறப்பும் முன்பு விளக்கப்பட்டது.  இதுவும் ஒளி வீசியது என்றனர்.

    முப்புலவர் ஆவார் ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பிகள்.  இவர்கள் வையகம் வியக்கும்நிலையில் உள்ளவர் என்பதைக் கூறவேண்டியதே இல்லை.  இதனை உலகம் நன்கு அறியும்.  மாணிக்கவாசகரும் உலகத்தாரால் வியத்தற்குரியர்.

    வையகத்தார் இவர்களை வியந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகளை எடுத்துக் காட்டலாம்.

சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் நம்சுந்தரனும்
சிற்கோல வாதவூர் தேசிகனும்-முற்கோலி
வந்திலரேல் நீறுஎங்கே மாமறைநூல் தான்எங்கே
எந்தைபிரான் ஐந்தெழுத்தெங் கே