பக்கம் எண் :

என

786

             சிறுதேர்ப் பருவம்

என்று ஒரு புலவர் வியந்து கூறியதைக் காண்க.  சிவப் பிரகாச சுவாமிகள் இந் நால்வர் மீது நால்வர் நாண்மணிமாலை என்னும் நூலையே பாடியுள்ளனர்.  இராமலிங்க சுவாமிகள் இந்நால்வர் மீது, தனித்தனியாக ஆளுடைப் பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள் மாலை, ஆளுடைய அடிகள் அருள் மாலை என்று பாடி இருப்பதையும் காண்க.  நம்பி ஆண்டார் நம்பிகள் இந்நால்வர்களைப் போற்றியுள்ளதைப் பதினோராம் திருமுறையில் பரக்கக் காணலாம்.

    இங்ஙனம் புலவர்கள் இவர்களைப் புகழ்ந்துள்ளதை அவர் அவர்கள் இவர்கள்மீது பாடியுள்ள தோத்திரங்களால் அறியலாம்.  இந்நால்வர் செய்துள்ள அற்புதங்களால் உலக மக்கள் யாவரும் வியந்துள்ளனர்.  ஆகவே, வையகம் வியக்கும் புலவர் என்றனர்.  இந்நால்வரும் பெரும் புலவர்கள் என்பது திருஞான சம்பந்தர் மாலை மாற்று, திருஎழுக் கூற்றிருக்கை, ஏகபாதம், திருவியமகம், முதலான கவி வகைகளைப் பாடி இருப்பதாலும், அப்பர் திருக்குறுந்தொகையாம் கலி விருத்தம், திருவிருத்தமாம் கட்டளைக் கலித்துறை, திருநேரிசை, தாண்டகம் முதலியவற்றைப் பாடி இருப்பதாலும், சுந்தரர் திருநாட்டுத் தொகையில் இந்த ஊர் இந்த ஊரைச் சார்ந்தது என்று குறிப்பிட்டிருப்பதாலும், திருத்தொண்டத் தொகையில் அடியார்களைத் தக்க முறையில் அடை கொடுத்துப் பாடி இருப்பதாலும், மாணிக்கவாசகர் பல்வகைப் பாடல்கள் அமைந்த திருவாசகத்தைப் பாடி இருப்பதாலும், தொல்காப்பியம் திருக்குறளோடு ஒருங்கு வைத்து மதிக்கப்படும் திருக்கோவையார் என்னும் நூலைப் பாடி இருப்பதாலும் என்க (ஈண்டுத் திருக்குறளுடன், தொல் காப்பியத்துடன் ஒருங்குவைத்துப் போற்றப்படும் சிறப்புடைய தெனச் செய்பியதன் கருத்து, “பல்கால் பழகினும் தெரியா உளவேல், தொல்காப்பியம், திருவள்ளுவர் கோவையர் இம்மூன்றினும் முழங்கும்” என்று இலக்கணக் கொத்துக் குறிப்பிடுதலால் என்க.) மூவரது அருந்தமிழ்ச் சுவையினை ஆராய்ந்து சேக்கிழார் தமது நூலைப் பாடி