இங
இங்ஙனம் ஏன் பாடினர்
என்ற குறிப்பினைச் சேக்கிழார்,
அன்பு நீங்கா அச்சமுடன்
அடுத்த திருத்தோ
ழமைப்பணியால்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப்
புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா
டுடையார்போல்
என்பு கரைந்து
பிரானார்மற்
றிலையோ என்ன
எடுக்கின்றார்
நித்தமும் நீங்கா
நிலைமையின் நீங்கி
நிலத்திடைப்
புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை
உணர்ந்துநொந் தடிமை
ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளா தொழியினும்
பிரானார்
இவரலா திலையோ
என்பார்
வைத்தனன் தனக்கே
தலையும்என் நாவும்
எனவழுத் தினர்வழித்
தொண்டர்
இவ்வகைப் பரவித்
திருக்கடைக் காப்பும்
ஏசின அல்லஎன்
றிசைப்ப
மெய்வகை விரும்பு
தம்பெரு மானார்
விழுநிதிக்
குவைஅளித் தருள
மைவளர் கண்டர்
கருணையே பரவி
வணங்கிஅப்
பதியிடை வைகி
எவ்வகை மருங்கும்
இறைவர்தம் பதிகள்
இறைஞ்சிஅங்
கிருந்தனர் சிலநாள்
என்றும் பாடி இருத்தலால்,
“முப்புலவர் அருள் முக்கனி அருந்தமிழ்ச் சுவை அனைத்தும் ஆராய்ந்து எடுத்துப் பல் செய்யுள் முகம்
அறிய அறிவித்த பெருநாவலன்” என்பது பொருத்தமாதல் காண்க. “முப்புலவர் அருள் முக்கனி” என்பதில்
ஒரு நயம் உளது. மூவர் யாவர் என்பதும், முக்கனி இன்ன என்பதும் நாம் அறிந்தவை. முக்கனி என்ற
உவமையால் மூவர் பாடிய பாடல்கள் தனித்தனிச் சிறப்புடையன என்பது பெறப்படுதலை உய்த்து
உணரவும். அப்பர்
|