பக்கம் எண் :

இந

 

       சிறுதேர்ப் பருவம்

791

  இந்த நிலைமை அறிந்தார் ஆர்
      ஈறிலாதார் தமக்கன்பு
  தந்த அடியார் செய்தனவே தவமாம்
      அன்றோ சாற்றுங்கால்

என்று பாடி அமைத்துள்ளார்.

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
    மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
    பழுங்குடில் தோறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
    திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்த தாண்டாய்
    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

என்பது திருவாசகம்.

மன்றுளே திருக்கூத் தாடி
    அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும்
    தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனால் மிக்கீர்
    விருப்புடன் இருக்க நம்பால்
என்றும்இவ் இளமை நீங்காது
    என்றெழுந் தருளி னாரே

என்பது பெரிய புராணம்.

ஆங்கவர் மனத்தின் செய்கை
    அரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை
    உயர்ந்தஐந் தெழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை
    தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை உடையும் கீளும்
    பழுதில்கோ வணமும் நெய்வார்

என்னும் இப்பெரிய புராணப் பாடல்,