ச
சிந்தனைநின் தனக்காக்கி
நாயி னேன்தன்
கண்ணினைநின் திருப்பாதப்
போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே
ஆக்கி வாக்குன்
மணிவார்த்தைக்
காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தெனை ஆட் கொண்டுள்ளே
புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே
மலையே உன்னைத்
தன்தனைசெந் தாமரைக்கா
டனைய மேனித்
தனிச்சுடடே இரண்டுமிலித்
தனிய னேற்கே
என்னும் திருவாசகப்
பொருளை ஒட்டியது என்பதை எவரேனும் மறுக்க ஒண்ணுமோ?
நீடும் உரிமைப்
பேரரசால் நிகழும்
பயனும் நிலைதவழும்
தேடும் பொருளும்
பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற்
றம்பலத்துள்
ஆடும் கழலே எனத்
தெளிந்த
அறிவால் எடுத்த
திருப்பதிகம்
கூடும் அன்பில்
அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர்குலப்
பெருமான்
என்ற சேக்கிழார்
பாடும் பாட்டு,
ஓடும் கவந்தியுமே
உறவென்றிட் டு்ள்கசிந்து
தேடும் பொருளும் சிவன்கழலே
எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டைஇடக்
குனித்தடியேன்
ஆடும் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே
என்று மாணிக்கவாசகர்
தம் மணிமொழியைத் தழுவிய தன்றோ! ஆகவே, சேக்கிழார் திருவாசகத்தினையும் ஆழ்ந்து கற்று
அவற்றின் பொருளைத் தம் பாடலில் இணைத்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார் என்று நாம் உணரவேண்டியவர்களாய்
உள்ளோம்.
சிவை என்பது பரமேஸ்வரியை
உணர்த்தும். சொல் என்பது நெல்லை உணர்த்தும், உமாதேவியார் நெல்லை வேளாளர்கட்கு உதவினாள்
என்பதை முன்பே கண்டோம். அக்குறிப்பே “ஈண்டுச் சிவை உதவு சொல்கொண்ட சேவையர்” என்ற
அடியில் காணப்படுவதாகும். அன்றிச்
|