இதன
இதனால்தான் ஈண்டு “ உம்பல் தாவும் திறல் அரிகுருளைபோல் எழுந்து “ எனப்பட்டது.
திருஞான சம்பந்தர்
எல்லாரையும் இன்பக் கடலில் அழுத்தியதை இவரது வரலாற்றில் பரக்கக் காணலாம்.
“ ஐவரை வெல் அறுவர் “
என்ற தொடரில் முரண் தொடையும், எண் அலங்காரமும் அமைந்திருத்தலைக் கண்டு இன்புறுக. ஐவர்
எனப் பஞ்ச இந்திரியங்களாகிய மெய்,வாய், கண், மூக்கு, செவி என்றவற்றை அர் விகுதி கொடுத்துச்
செப்பியது திணை வழு அமைதி பற்றி ஆகும். அறுவர் திருஞானசம்பந்தர், கலிக்காமர், திருமூலர்,
தண்டி அடிகள், மூர்க்க நாயனார், சோமாசி மாறர் என்பவர்கள்.
சேக்கிழார், “ திருஞானசம்பந்தர்
வரலாறு கூறத் தொடங்கும்போது, “ பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம் “ என்றும்,
ஏயர்கோன் கலிக்காமரைக் குறிப்பிடும்போது, “ ஏயர் கோனார் மலரடி வணங்கி “ என்றும், “ திருமூலதேவர்
மலர்க் கழல் வணங்கி “ என்றும், ‘கண்ணின் மணிகள், அவை இன்றிக் கயிறு தடவிக் குளம் தொட்ட
எண்ணில்பெருமைத் திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி “ என்றும், “ மூர்க்கர் கழல் வணங்கி “ என்றும்,
திருவடிகளைப் போற்றியதுபோல ஈண்டும் பிள்ளை அவர்கள் “ பொற்பாத மலர்உச்சி வைத்து ஏத்தெடுப்பாம் “ என்றனர்.
அறுவர் வரலாறுகள் பின்வருவன.
திருஞானசம்பந்தர் : இவர் சீர்காழியில் கௌணிய மரபில் சிவபாத இருதயர்க்கும் பகவதியார் எனும் அம்மையார்க்கும்
திருமகனாராகத் தோன்றி, இறைவி தந்த ஞானப்பால் உண்டு, திருஞான சம்பந்தர் எனத் திருப்பெயர்
பெற்றார். திருக்கோலக்காவில் தாளம் பெற்றார். திருநெல்வாயில் அறத்துறை இறைவர் தந்த
பல்லக்கில் ஏறிச் சென்று தலங்கள் தோறும் பதிகம் பாடி வந்தார். கொல்லி மழவன் மகளின்
முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருக் கொடிமாடச் செங்குன்றூரில் உடன் இருந்த அடியார்கள்
பட்ட குளிர் நோயைப் போக்கினார். திருப்பட்டிச் சுரத்தில்
|