வ
|
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
19 |
வரும்முறைமைப் பருவத்தில்
வளர்ப்புகலி பிள்ளையார்
அருமறைகள் தலைஎடுப்ப
ஆண்டதிரு முடிஎடுத்துப்
பெரும்மூவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார் போல்
திருமுகமண் டலம் அசையச்
செங்கீரை ஆடினார்
நாமறியோம் பரசமயம்
உலகீர்எதிர் நடவாது
போமகல என் றங்கை தட்டுவதும்
புனிதன்பால்
காமறுதா ளம்பெறுதற்
கொத்துவதும் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்
சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தம் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனஅழைப்ப
சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணல்சிற் றில்களிழை
நறுநுதல்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புந்
துளிஅரும்பக் கொழும்பொடிஆ டியகோலம்
மறுகிடைப்பேர் ஒளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்
என்னும் இப்பாடல்களில்,
காப்புப் பருவம், தாலாட்டுப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், வருகைப் பருவம்,
சிறுதேர்ப்பருவம், சிற்றில் பருவங்கள் பொருந்தி இருத்தலை நோக்குக. முத்தப்பருவக் குறிப்பினைக்
கண்ணப்ப நாயனார் புராணத்தில் அமைத்துள்ளனர்.
பொருபுலிப்
பார்வைப் பேழ்வாய்
முழைஎனப்
பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை
கண்டு
பைந்தழைக் கைக்கொண்
டோச்ச
இருசுடர்க் குறுகண்
தீர்க்கும்
எழில்வளர்
கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம்
அத்தாய்
வாய்முத்தம்
கொள்ள மாற்றி
என்பது அந்தப் பருவக்
குறிப்புள்ள பாடல்.
|