New Page 1

18

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்

சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களை

பற்றிப் பறித்துக்கொண் டோடும் பரமன்தன்

நெற்றி் இருந்த வாகா ணீரே

   நேரிழையீர் வந்து காணீரே 

என்னும் இப்பாடல்களின் வழி தாலப் பருவம், அம்புலிப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், வருகைப் பரும், முத்தப் பருவம், சிற்றில் பருவம் அமைந்திருத்தலை உணர்ந்துகொள்ளலாம். 

   கி. பி. 8-ஆம் நூற்றாண்டினரான குலசேகராழ்வரது பெருமாள் திருமொழியில் தாலப் பருவக் குறிப்புக் காணப்படுகிறது. 

     பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேஅருளி

     ஆராஅன் பிளையவனோ டருங்கானம் அடைந்தவனே

     சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே

     தாராளும் நீள்முடிஎன் தாசரதீ தாலேலோ

 என்ற பாடலைப் பார்க்கவும்.

    கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியினரான சேக்கிழார் பெருமானார், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பிறப்பின் வளர்ச்சியைக் கூறும்போது பிள்ளைப் பிரபந்தங்களுக்குரிய பருவங்கள் பத்தனுள் ஏழு பருவங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

      ஆறுலவும் செய்யசடை ஐயர்அரு ளாலே

     பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு

      வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்

     நீறுதிரு நெற்றியில் நிறுத்திநி றைவித்தார்

தாயர்திரு மடித்தலத்தும் தயங்குமணித்த விசினிலும்

தூயசுடர்த் தொட்டிலினும் தூங்குமலர்ச் சயனத்தும்

சேயபொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரு

நாயகனைத் தாலாட்டு நலம்பல்பா ராட்டினார்