New Page 1
54 |
சேக்கிழார் வரலாறும்
காலமும்
|
தொண்டைநாடு :
நந்தம் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டியநாடு என்ற முப்பெரும் பிரிவினை உடையதானாலும், தொண்டை
நாடு, நடுநாடு கொங்குநாடு என்ற பிரிவினையும் கொண்டு திகழ்கிறது ; தொண்டைநாடு என்பது, மேற்குப்
பவழமலை, வடக்கு வேங்கட மலை, கிழக்குக் கீழக்கடல், தெற்குப் பெண்ணையாற்றையும் எல்லையாகக்
கொண்டு திகழ்ந்தது ; இதனால் செங்கற்பட்டு மாவட்டம், வட ஆர்க்காடு மாவட்டம், தென்னார்க்காடு
மாவட்டத்தில் ஒரு பகுதியினையும் கொண்டு விளங்கியது. சிற்றூர் சில்லாவும் இதனுடன் சேர்ந்து
விளங்கியது ; ஆனால், இதுபோது நாட்டு எல்லைப் பிரிவினில் வேங்கடத்தையும், சிற்றூரையும்
இழக்க நேர்ந்தது ; காஞ்சிபுரம் தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்தது.
பழங்காலத்துத் தொண்டை
நாட்டு எல்லை இன்னது என்பதைத் தனிப்பாடல் ஒன்றால் அறியலாம்.
மேற்குப் பவளமலை
வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கும் உவரி
அணிகிழக்கு-பார்க்குளுயர்
தெற்குப்பி னாகிதி
கழ்இருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே
நாட்டு
என்ற பாடலைக் காண்க.
தொண்டை நாடு முதல்
முதல் குறும்பர் நாடாகத் திகழ்ந்ததாகக் கூறுவர். இக்குறும்பர்கள் தம் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு
பொழுது போக்கி வாழ்ந்தனர். ஆகவே, இந்நாடு குறும்பர் நாடு என்ற பெயருடன் இருந்தது என்பர்.
இக்குறும்பர்களே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆண்டதாகவும் கூறுவர். அதன் பின்
ஆதொண்ட சக்ரவர்த்தி அக்குறும்பரிடமிருந்து நாட்
|