New Page 1
|
|
சேக்கிழார் வரலாறும் காலமும் |
55 |
டைப் பறித்து ஆண்டதனால்
தொண்டை நாடாயிற்று என்பர்.
கிள்ளிவளவன்
நாககன்னிகை என்பாளைக் கடற்கரையில் சந்தித்துக் காதல் கொண்டு மணந்து, கருவுற்றனள் ;
அதுபோது, நாகக் கன்னிகை, “ நான் மகனைப் பெற்றால் அவனை நீங்கள் எப்படி என் புதல்வன்
என ஏற்பீர் ?” என்று கேட்டபோது, “ பிறந்த மகனைத் தொண்டைக் கொடியால் சுற்றிக் கடல்வழி
அனுப்பின், அது அக்கொடியுடன்வரின் நான் ஏற்பேன் “ என்று கூறிப் போய்விட, அங்ஙனம் நாககன்னிகை
தான் பெற்ற மகவைச் சோழன் கூறியபடி தொண்டைக் கொடியைச் சுற்றி அனுப்ப, அக்குழந்தையை மன்னன்
ஏற்று அது வளர்ந்த பிறகு அதற்கு அரசுரிமை தந்து அரசாள செய்த நாட்டைத் தொண்டை நாடு என்றனர்
என்பர். தெலுங்கர்கள், “ கரிகாற் சோழனுக்கு மகிமானசோடன், என்ற பெயரில் ஒரு மகன் உண்டு.
அவனுக்குத் தொண்டைமானன் என்றும், கரிகாலன் என்றும் தாசவர்மன் என்ற மக்கள் இருந்தனர்.
அவர்களுள் தொண்டைமானன் ஆண்ட நாடு தொண்டை நாடாயிற்று “ என்றும் கூறுவர்.
கோட்டங்கள் :
தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள் ஒன்று புலியூர்க்
கோட்டம் என்பது. இப் புலியூர்க் கோட்டத்திற்குத் தலைநகரம் புலியூர் என்பது. இப்புலியூர்
சென்னைக் கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து இரு கல் தொலைவில் உள்ளது. இக்கோட்டத்தைச்
சார்ந்த ஊர்கள் குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர், பூவிருந்தவல்லி முதலியன.
குன்றத்தூர் : இது
சென்னையிலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ளது. பல்லாவரம் வழியாகச் சென்றால் ஆறுகல் தொலைவில்
இவ்வூரை அடையலாம். இவ்வூர் கி. பி. பத்தாவது, பதினோறாவது நூற்றாண்டில் பேரூராக விளங்கி
இருந்தது ; இதுபோது சிற்றூராக இருக்கிறது. இக்காலத்தில்
|