அந

64

மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு

அந்தாதி முதலான நூல்களைப் பாடினார்.  இவற்றின் மூலம் திரு.  பிள்ளை அவர்களின் நுண்மாண் புலமையை அறிந்து இவருக்கு 1854-ஆம் ஆண்டு பல புலவர்கள் கூடிய சபையில் மகாவித்துவான் என்னும் சிறப்புப்பட்டத்தை அளித்தனர்.  இந் நிகழ்ச்சி, அதுபோது ஆதின கர்த்தராக விளங்கிய குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவாவடுதுறையில் அருள் செங்கோல் நடாத்திய காலத்தில் நிகழ்ந்தது. 

     திரு. பிள்ளை அவர்கள் பெரிய புராணப் பிரசங்கம் செய்வதில் வல்லவர்,  இவரது பிரசங்கத்தைக் கேட்டு வந்த சைவத் திருவாளர் செட்டிநாட்டு வன்றொண்டச் செட்டியார் என்பவர், சேக்கிழார் பெருமானார்மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடும்படி வேண்டினார்.  திரு. பிள்ளை அவர்கள் பிள்ளைத் தமிழ் பாடுவதில் மிக்க பேராற்றல் படைத்தவர்கள்.  பத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியவர் இது கொண்டே திரு. பிள்ளை அவர்களைப் பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று அறிஞர்கள் கூறி வந்தனர்.  ஆகவே, திரு. செட்டியார் வேண்டுகோளை மறுக்காமல், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் நூலைப் பாடினார்.  திரு. பிள்ளை அவர்கள் பெரிய புராணத்தினிடத்தும் சேக்கிழார் பெருனாரிடத்தும் தமக்கு இருந்த பற்றும், ஈடுபாடும் கொண்ட காரணத்தினால்தான் திரு. செட்டியார் வேண்டியதும் சேக்கிழார் பிள்ளைத் தமி்ழைப் பாடியருளினர்.  திரு. பிள்ளை அவர்கள் பாடிய பிள்ளைத் தமிழ் நூல்களுள் சேக்கிழார் பிள்ளைத் தமிழே இறுதியானது.  இந்நூலின் சிறப்பை இவ்விளக்க நூலில் பல இடங்களில் பரக்கக் காணலாம்.

      திரு. பிள்ளை அவர்கள் இரு லட்சக் கவிகளுக்குமேல் பாடியிருப்பதாகக் கூறுவர்.  இவர் எழுபது புராணங்கள், பதினோரு அந்தாதிகள், பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்கள், இரண்டு கலம்பகங்கள், ஏழு மாலைகள், மூன்று கோவைகள், உலா, லீலை ஆகிய பிரபந்தங்களில் ஒவ்வொன்று, தூது நூல் ஆகியவற்றை இவர் பாடியிருப்பனவாகக் கணக்கிட்டும் கூறுவர்.  இவரது நூல்கள் பலவற்றை இவரது