ம
|
மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு |
65 |
மாணவர்களுள் ஒருவரான
மகா மகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தத்திரட்டு,
என்னும் பெயரால் வெளியிட்டுள்ளனர். திரு. பிள்ளை அவர்கள் அவ்வப்போது பாடிய தனிப் பாடல்கள்,
ஆனந்தக் களிப்புக்களும் உண்டு. காசி ரகசியம், சூத சங்கிதை ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தனர்.
குசேலோபாக்கியனமும் இவரால் பாடப்பட்டதே. என்றாலும், இவரது மாணவரான வல்லூர் தேவராசப்
பிள்ளை அவர்களின் பெயரால் இது வெளிவந்துளது. குமர குருபரர,் சிவஞான முனிவர் வரலாறுகளையும் செய்யுட்களில்
பாடியவர்.
திரு. பிள்ளை
அவர்களின் மாணவர்கள் பூவாளூர் தியாகராய செட்டியார், டாக்டர் உ. வே. சுவாமிநாதய்யர், மாயூரம்
வேதநாயகம் பிள்ளை, சவரிராயலு பிள்ளை, வல்லூர் தேவராசப் பிள்ளை முதலியோர்கள்.
திரு. பிள்ளை
அவர்களிடம் நல்ல நினைவாற்றல் உண்டு. இவரிடம் செருக்குக் கிடையாது. தம்மைப் புகழ்ந்து பேசார்.
எவரிடமும் பணிவே காட்டுவர். பிறர்க்கு உதவி புரிவதில் முன் நிற்பவர். பொறுமைக் குணம்
படைத்தவர். பிறரைப் பற்றிக் குற்றம் கூறாதவர். மாணவர்களிடம் அன்பு காட்டியவர்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் பண்பினர். வளமும், பொருட் செறிவும்
நயமும் அமையப் பாடல்களைப் பாடியவர். ஆயாசம், இன்றிக் கவிகளைப் பாட வல்லவர். மாட்டு
வண்டியில் போகும்போதே ஒரு நூலையோ, புராணத்தையோ பாடி, முடிப்பவர் என்றால், இவரது கவி
பாடும் ஆற்றலை என்னென்று வியப்பது !
ஒருமுறை ஸ்ரீ
ஆறுமுக நாவலரும் இவரும் மார்கழி மாதம் மதுரை வையை ஆற்றில் விடியற்காலம் நீராடும் போது, நளிர்
மிகுதியால் இருந்த நிலையில் திரு. ஆறுமுக நாவலர், “பனிக்காலம் மிகக் கொடிது.“ என்றனராம்.
உடனே திரு. பிள்ளை அவர்கள், “ பனிக்காலம் மிக நல்லது “
|