என

66

மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு

என்றாராம். திரு. நாவலர் அவர்கள், திரு பிள்ளை அவர்கள், தம் கருத்தை ஒட்டியே விடை இறுத்தார் என்று நகைத்தனராம்.  அங்கிருந்தவர்கட்குத் திரு. பிள்ளை அவர்கள் கூறியது புரியாது திகைத்தபோது, திரு நாவலர் அவர்கள்,  “ பனிக்கு ஆலம்“ (விஷம்) மிக நல்லது என்று கூறிய பனியின் கொடுமையின் அறிவுறுத்தனர் திரு.  பிள்ளை அவர்கள் என்று விளக்கினராம்.  இது செவி மரபு வரலாறு என்றாலும், திரு. பிள்ளை அவர்களின் நுண்ணறிவு உரையாடலிலும் துவங்குகிறது அன்றோ ?  

     திரு. பிள்ளை அவர்களைப் பற்றி இவரது மாணவர்களும் நண்பர்களும் பாடிய பாடல்கள் பல உள.  அவற்றுள் சில பின் வருவன.  அவர்களின் சிறப்பை மேலும் அறியலாம்.

      தேக்குபுகழ்ச் சோணாட்டில் திரிசிரா

        மலையின்மிகு திருவம் ஓங்கும்

     தூக்குபுகழ் வேளாளர் குலாம்புதியில்

        சிதம்பர வேள்துலங்கப் பன்னாள்

     ஆக்குபுகழ் எனத்தோன்றிப் பலகலையும்

        ஒருங்கேஆய்ந் தான்றோர் பல்லோர்

     வீக்குபுகழ் பரந்தகயி லாயபரம்

        பரையாகி விளங்கா நின்ற

 

     எங்கள்துறை சையைஅடைந்தம் பலவாண

        தேவனடி இனிது சூட்டத்

     துங்கமுடி வாய்ந்துசிவ ஞானகலை

        அகங்கைநெல்லித் தோற்றத் தாய்ந்து

     கங்கைதரித் தருள்சடையோன் பலதலத்து

        மான்மியம்தன் கருத்தின் ஓர்ந்து

     சங்கையில்செந் தமிழின்மொழி பெயர்த்தியற்றும்

        கடப்பாட்டில் தலைமை ஆனோன்

 

     மின்னும்அரன் அடிஅன்றிக் கனவிலும்வே

        றெண்ணாத விரதம் பூண்டோன்

     இன்னும்எம்போ லியர்பலருக் கிலக்கியமும்

        இலக்கணமும் எளிது தந்தோன்