பக்கம் எண் :

1


கடவுள் துணை
சாற்றுக் கவிகள்

திரிசிரபுரம் - மாவித்துவான்

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களியற்றிய,
ஆசிரியப்பா
   மலர்தலை யுலகின் அலர்பல வுயிரும்
   அறமுத லொருநால் திறமுமெளி தடையத்
   தெய்வமுண் டென்று தெளிதரன் முன்வைத்
   தஃதுணர்ந் தார்க்கே அத்தே வியல்பும்
5  வாழ்த்து முணர்ந் தியற்ற மனமுறு மாதலின்
   அதுபின் னுறவமைத் தரசர்தம் நீதி
   தெய்வ நீதியே சிவணு மாதலின்
   பின்னது நிறுவிப் பெரும்பூம் பாலர்
   இயல்பொடு பிரியா தியலுந் தன்மையிற்
10  குடிகள தியல்பு குறித்ததன் பின்னமைத்து
   இயல்புறத் தழீஇய இருங்குடிக் கல்லது
   ஞானா சாரியன் நண்ணா னாதலின்
   அனையவன் பெருமை அனையதன் பின்னமைத்து
   இயலா சிரியன் இயலுணர்ந் தார்க்கே
15  பொய்யா சிரியன் புன்மை தோன்றும்