பக்கம் எண் :

2

  ஆதலி னவனிய லதன்பின் னுறநிறீஇ
ஆரியன் இயல்போர்ந்து அடுப்பார்க் கன்றித்
தந்தைதாய் வணக்கந் தகாமையின் அஃததன்
பின்னுற நிறுவிப் பெற்றியின் வணங்கும்
20 மைந்தருக் கனையார் மகிழ்ந்தாற் றுதலிவை
என்றுநூல் கற்பித் திடுதல் வளர்த்தல்
மற்றதன் பின்வைத் துற்றுழி யுதவல்
கல்வியே ஆதலிற் காமரு மாதரும்
உணருமா றதன்பின் னுறவஃ துறுத்திக்
25 கற்றோர்க் கன்றி மற்றோர்க் கியலாது
என்பது தோன்ற உடன்பிறந் தாரியல்
பண்புற அதன்பின் அமைதர நாட்டி
உடன்பிறந் தாரொழுக் குறுமில் லறத்திற்கு
இன்றி யமையா தென்பது தோன்றக்
30 கிழவன் கிழத்தி யியலதன் பின்வைத்து
இயலுறு கிழத்தி இயலுணர்ந் தார்க்கே
அவண்மறு தலையாம் அணங்கின் நடையுணர
வருமத னாலது மற்றதன் பின்வைத்து
இவ்வா றொழுகும் இயல்புடை உயர்ந்தோர்
35 தாழ்ந்தோர்த் தாங்கலுந் தாழ்ந்தோ ருயர்ந்தோர்க்கு
அடங்கி யொழுகலும் அறனென அதன்பின்
ஒன்றன் பின்னர் ஒன்றுற நிறுவி
அடங்கி யொழுகுநர்க் ககலும் பொய்ம்மை
பொய்நின் றகலப் போமே களவும்
40 களவு நீங்கக் கைவிடும் கொலையுங்
கொலையது தொலையக் குலைதரு மதுவும்
மதுக்குடி யகல மாறுஞ் சூதுஞ்
சூது நீங்கப் பரிதானந் தொலையும்
பரிதான மகலப் படும்புறங் கூறலும்