45 | புறங்கூற லொழியப் போம்பெரி யோரைத் தூற்றலு மஃதறத் தொலையு முலோபமும் உலோப நீங்க வொழியுஞ் சோம்பலுஞ் சோம்பல் நீங்கத் தொலைதருஞ் சினமுஞ் சினமது தீரச் சிதையும் பொறாமையும் |
50 | என்பது தோன்ற விவையெலா மதன்பி னொன்றன் பின்ன ரொன்றுற வமைத்துப் பொறாமை யொழிந்த புண்ணியர்க் கல்லது கல்விச் செருக்குங் காரிகைச் செருக்குஞ் செல்வச் செருக்குஞ் சேரா வென்பதற் |
55 | கதன்பி னொவ்வொன்றா வடைவுற நிறுவிச் செருக்கொழிந் தவரே தீயரைச் சேரார் என்பது தோன்ற வதன்பி னிணைத்துத் தீச்சார் பிலார்க்கே செறிபிழை பொறுத்தல் இனியசொற் கழற லியலும் பிறர்க்குத் |
60 | தீங்குசெய் யாரைச் செறியுமென் றதன்பின் முறையா ஒவ்வொன்று முயங்குற வைத்து நினையுமிந் நெறியோர் நெடுந்துயில் துறப்பர் உரைக்கு மதற்பே ருண்டியு மொழியும் புகலஃ தறத்தற் புகழ்தலு மொழியும் |
65 | இஃதறா தெனிற்புக ழிகழ்மதி யாமை யுண்டா மென்றற் கொன்றன் பின்ன ரொன்றுற வதன்பி னுறமுறை நாட்டிப் புகழிகழ் மதிக்கும் புண்ணியர் தமக்கே பரோப காரம் பலிக்குமென் றுணர |
70 | வதன்பி னிறுவி யத்தகை யோரே பொருளவா வொழிவரப் புண்ணியர் தமக்கே மெய்ந்நிலை யாமையும் வெளிப்படு மவர்க்கே துன்பப் பகுதியுந் தோன்றிடு மவர்க்கே |