பக்கம் எண் :

4

  யறஞ்செயுந் திறமுண் டாமவர் தாமே
75 கணிகைய ரியல்பு கழிப்பரென் றுணர
விவைமுறை யதன்பி னியைதர நாட்டிக்
கரைதரு மினையர் கமுகந் தோட்டம்
என்றாற் போல வியல்விலங் கினத்துக்
கிடர்செயா ரெனப்பி னிவைதர வமைத்து
80 நன்னெறி பலவு நவில்வில தடங்கப்
பன்னெறி யென்பது கடையுறப் பதித்து
நீதிநூ லென்றோர் நிலவுபெய ரிட்டுத்
திருமா றந்த தெள்ளமு தொப்ப
யாவரு முவப்ப வினிதி னியற்றித்
85 தந்தன னொருநூல் தவலருங் கேண்மைமற்
றன்னவன் யாரெனி னறைகுதுங் கேண்மோ
புலிக்கொடி கயற்கொடி பெருவிற் கொடியுடை
வேந்தர் நாட்டுறை வேளாண் மாக்கள்
சோழிய ரென்றும் பாண்டிய ரென்றுங்
90 கொங்க ரென்றும்பெயர் பெற்றன ரவருள்
வளரெறும் பீசர் மலைக்கு மேற்குக்
கடும்புனல் பாய்மதிற் கரைக்குக் கிழக்கு
நலந்தரு காவிரி நதிக்குத் தெற்கு
வளம்பொலி நம்பிரான் மலைக்கு வடக்கு
95 நவிலுமிவ் வெல்லை நான்க னுட்பட்ட
விடங்குடி கொண்ட வியல்வே ளாளர்
முன்ன முரைத்த முத்தமிழ் வேந்தரு
மெங்கண் மூவருக்கு மியன்முடி சூட்டுதற்
குங்களை யமைத்தன முவந்துகொள் வீரெனக்
100 கொண்டுமகிழ்ந் தனையார் கோத்தன் மையரே
யாயின ரதனா லவர்வாழ் நாடு
கோனா டென்றோர் குலவுபெயர் பெற்றது