பக்கம் எண் :

5

  உரைக்கருங் குன்றம் ஒருபதி னெட்டும்
நத்த மெழுநூற் றறுபத் தாறும்
105 உன்னும் படிநன் குளகுளக் காடும்
முன்னு மாயிரத்து முந்நூற்று முப்பது
தேவா லயங்கள் சிறக்குநூற் றெட்டும்
இரும்பிர மாலய மிருபத் தெட்டுங்
குறையறக் கொண்டவக் கோனாடு பின்னர்
110 அறைதரு புனல்வெள் ளாற்றின் தென்பால்
உறைதென் கோனா டொலியூர்க் கூற்றந்
திரைகரை எறியுமத் திருநதி வடபால்
ஒளிர்வட கோனா டுறையூர்க் கூற்றம்
எனப்பெயர் பெற்றுநன் றியங்குங் காலம்
115 வண்மையவ் வேளாண் மக்கள்மிகப் பெருகி
வடகோ னாட்டில் வண்குளத் தூரில்
பெரிதிருத் தலின்மிகப் பெரியகோ னாடென்
றொருபெயர் பெற்றவவ் வென்குளத் தூரில்
கொங்கு ராயர் கோத்திர மதனில்
120 வந்தவ தரித்த செந்தமிழ்க் குரிசில்
இரும்புவி யேத்தும் இளையான் குடியில்
அருமுளை வாரி யன்னம் படைத்த
குருமணி மாறனங் குலமெனுங் கொண்டல்
அவிர்விரை யாச்சிலை யாண்டார் திருமலை
125 உடையான் கருவரா லுகளரி யாற்றான்
குளிர்புனல் வயறொறுங் குலவுகோ னாட்டின்
அமரரும் புகழ்வே ளாண்குளத் தூரான்
உச்சைச் சிரவம் உறழும் பரியான்
அயிரா வதநிக ராயதிண் களிற்றான்
130 குளிர்மதுப் பொழியங் குவளைமா லிகையான்
உலக மூன்றும் உணர்கொடை முரசான்