| வெற்றிக் கொடியெனு மேழிக் கொடியான் அடங்கலர் நடுங்க அடக்கும் ஆணையான் அளவில்பன் னூலும் அரில்தப வுணர்ந்தோன் |
135 | பண்பெலாம் ஓருருப் படைத்தெனப் பொலிவோன் ழுஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிறுழு வெனப் பெரியோர் உரைத்தவாக் கியத்திற் கொருசான் றாகப் பயன்படு செல்வம் படைத்துமகிழ் பூமான் |
140 | அடைந்தோர் வெங்கலி யடர்க்குந் திறலோன் பிறர்மனை நோக்காப் பேரறி வாளன் கற்றோர் நட்புக் கழலாக் கனவான் நானிலம் உவப்ப நடத்து நீதியான் அரும்பொருள் செறியும் ஐந்திணைக் கோவை |
145 | நம்பாற் கேட்ட நகுபுகழ் பெரியோன் வலந்தரு நதிக்குல வள்ளல் நவத்தரு வேத நாயக மாலே. |
| |
விருத்தம்
|
தெரியவிரு வேறுலகத் தியற்கைதிரு வேறு தெள்ளியரா தலும்வேறென் றுள்ளபடி யுரைத்த அரியபுகழ் வள்ளுவர்தம் வார்த்தையினை மறுத்தான் அரசர்கா ரியநடவும் அதிகாரத் தொடுநூல் அரியவென வுணர்ந்துபெருஞ் செல்வமுங்கல் வியுமிக் கொருங்கடைந்து பொருட்கொடையில் ஒப்பிலா னாகி விரியவனி மகிழவொரு நீதிநூ லியற்றி விளக்கியசீர் வேதநா யகக்குரிசில் தானே. |