பக்கம் எண் :

7

வேறு

வள்ளுவரா தியரேநல் நீதிநூல் உரைப்பதற்கு
   வல்லா ரென்று
துள்ளுவர்யா வரும் அனைய துண்மையா யினுங்குளத்தூர்ச்
   சுகுண வள்ளல்
உள்ளுவர்பா லருள்நிறவும் வேதநா யகமகிபன்
   உரைத்த நீதி
தள்ளுவர்யா ராதலில்தேற் றேகாரந் தவிர்த்திசைத்தல்
   தகுதி யாமே.
 
ஓதிநூ லுணர்ந்தகுளத் தூர்வேத நாயகமா
   லுவப்பிற் செய்த
நீதிநூல் தேவியலா சிரியனிய லுணர்த்துதலான்
   நிகரில் ஞானச்
சோதிநூ லெனச்சொல்வாம் இந்நூன்மு னெந்நூலுஞ்
   சொல்லிற் கால்நூல்
பாதிநூன் முக்கால்நூல் உவட்டுநூல் சிலம்பிநூல்
   பருத்தி நூலே.
 
வில்லாம திற்குளத்தூர் வேதநா யகமகிபன்
   விரும்பிச் செய்த
நல்லாருண் மகிழ்நீதி நூலிலுள்ள கற்பனையும்
   நயமும் ஓரின்
எல்லாருங் கற்றவரே யெல்லாரும் பாடுநரே
   யெல்லா ருந்தாஞ்
சொல்லாரும் அறிவினரே யறிவினர்தந் துதியவருஞ்
   சூடு வாரே.