பக்கம் எண் :

8

முன்னோர்க ளுரைத்தபெரு நீதிநூற் பொருள்தெரிய
   முயலின் அம்மா
பின்னோர்க ளுரைத்தவுரை பலவகையோ ரினுமையம்
   பிறந்தொன் றற்கொன்று
அன்னோர்சொல் மாறுபடும் பொருள்விளங்க உருபுமுத
   லவிழ்த்துப் பாடும்.
இன்னோர்நம் வேதநா யகமுகில்நூல் போலுளதோ
   மதிக்குங் காலே.
பொருளுடையோன் நீயேயோ வடதிசைக்கோ மகனுமுளன்
   புவனங் காக்கும்
அருளுடையோன் நீயேயோ நெடுமாலு முளன்நீதி
   மைனூல் சொல்லுந்
தெருளுடையோன் நீயேயோ வள்ளுவனு முளன்குளத்தூர்ச்
   செல்வா நாளும்
இருளுடைய வெழுகதிர்நேர் வேதநா யகமகிபா
   இயம்பு வாயே.
தாவில்நூற் பொருட்கேள்வி யுறலதிக மதற் கதிகந்
   தானே கற்றல்
மேவியதை வெளிப்படுத்த லதற்கதிக மதற் கதிகம்
   வியன்பாச் செய்தல்
பாவினுங்கற் பனையமைத்த லதற்கதிக நீதிநூல்
   பாடல் நாளும்
பூவினிடை யதிகமெனில் வேதநா யகமகிபன்
   புகழெற் றாமே
சேல்பாயும் புனற்குளத்நூர் வேதநா
   யகமகிபன் செய்தநீதி
நூல்பாயு மறிஞரே நுண்ணியராய்ச் சிறந்துவரு
   நோன்மை யாலே