பக்கம் எண் :

100

 நீதி நூல்
 
  பொய் முதலிய பழியில்லாதவர் ஒருவர்க்கும் அஞ்சாது அறவழியிலே நடப்பர். பொய் களவு முதலிய தீமையுடையவர் பகலைக் கண்டு அஞ்சும் வௌவாலைப்போல் இடுக்கு வழியிற் செல்வர். இவர்கள் இழிந்தவர்கள் என்பதற்கு இவர்கள் கூறும் பொய்யே சான்றாகும். நேர் வழியில் நடப்போர் குற்றமற்ற தூயவர் என்பதற்கு அவர்கள் சொல்லும் மெய்ம்மையே உலகத்தின்கண் சான்றாம்.
 துரிஞ்சில்-வௌவால். இட்டிகை-இடுக்கு வழி. மகி-உலகம்.
 

7

 புரையிலா நன்மைக்காம் பொய்மையும் வாய்மையே
203
அயலார்செய் குற்றங்கள் கூறாமல்
    மறைத்தலே யறமா மன்னார்
துயருறா வண்ணம்நாம் பொய்த்தாலும்
    பிழையன்று சொந்த மாவோர்
பயன்வேண்டிச் சிறியதோர் பொய்சொலினும்
    பெரும்பழியாம் பார்மேல் கீழாய்
அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கின்னா
    தரும்பொய்யை அறையல் நெஞ்சே.
  மற்றவர்களுடைய நன்மைக்காம் குற்றத்தைக் கூறாமல் நீக்குதலே நன்மையாம். அவர்கள் துன்புறாதபடி நாம் பொய் சொன்னாலும் குற்றமாகாது. நமக்கு ஒரு பயன் கருதிச் சிறு பொய் சொன்னாலும், அது பெரியதொரு பழியாகும். உலகம் கீழ்மேலாகத் தடுமாறினும் பிறர்க்குத் துன்பந் தரும் பொய்யை மனமே சொல்லாதே.
 அயலார்-மற்றவர். மறைத்தை-நீக்குதல். சொந்தம்-தனது. பார்-உலகம். அயர்வு-தடுமாற்றம்.
 

8

  பழியும் பாவமும் பயப்பன பொய்யே
204
பாரினிற்பொய்த் திடல்பொய்க்க வுன்னுதல்பொய்
    யினைப்பிறர்க்குப் பயிற்றல் யாதோர்
காரியஞ்செய் வேனென்னச் சொலித்தவிர்தல்
    தனக்கேலாக் கருமந் தன்னை