பக்கம் எண் :

99

  பொய்
 
  மெய் சொல்லுவோர் செல்வத்தால் ஏழைகளா யிருந்தாலும், பெரும்பொருளையும் அவர் கையில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சமாட்டார். பொய் சொல்வார் பெருஞ்செல்வம் படைத்தவராயினும், அவர்கள் கையில் ஒரு செல்லாக் காசும் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள். ஆயின், பொய்யுடையான் தன்மையைப் பற்றி என்ன சொல்லுவது?
  கவ்வை-பழி. படிறு-பொய்.
 

5

  பேச்சால் உயர்மக்கள் பேசுபொய் யாற்கடையர்
201
விலங்குபற வையினுநரர் வாக்கொன்றாற்
    சிறப்புடையர் விளங்குந் திண்மை
இலங்குவா யாலுரையா தவத்தமுரைப்
    போருலகம் இகழ்வி லங்கின்
குலங்களினுங் கடையராஞ் சாணமதை
    யமுதுவைக்குங் கோலச் செம்பொற்
கலங்களின்வைத் தலையொக்கும் மெய்க்குரிய
    வாயாற்பொய் கழற லன்றே.
  விலங்கு பறவை இவற்றைவிட மக்கள் மனக்கருத்தை (பேச்சு மொழியாலும் எழுத்து மொழியாலும்) விளக்குவதனாலேயே சிறந்தவராகின்றனர். வாயால் உறுதி பயக்கும் உண்மையே உரைக்க வேண்டும். மெய் சொல்லாது பொய் சொல்லின் தாழ்வான விலங்கினத்தாலும் தாழ்வாவர். அது, அமிழ்து வைக்கும் பொற்கலத்தில் சாணம் வைப்பதை யொக்கும்.
  நரர்-மக்கள். அவத்தம்-பொய். கடையர்-தாழ்வானவர். கழறல்-சொல்லுதல்.
 

6

  பொய்யர்க்கு இடுக்கு வழியே பொருந்தும்
202
பழியிலா ரொருவர்க்கு மஞ்சாது
    நேர்வழியே படர்வார் வவ்வுந்
தொழிலுளார் பகற்கஞ்சுந் துரிஞ்சில்போ
    லிட்டிகையில் தொடர்ந்து செல்வார்
இழிவுளா ரென்பதற்குப் பொய்த்தலே
    சான்றாகும் ஏசில் தூய
வழியுளா ரென்பதற்குச் சரதமே
    சாட்சியாம் மகியின் கண்ணே.