பக்கம் எண் :

98

  நீதி நூல்
 
  பொய் சொல்லுவதே தம் திறமையாகக் கொண்டோர் தம்மை மறந்து ஒரு மெய் சொன்னாலும் அம்மெய்யை ஒருவரும் நம்பார். மனைவி, மக்கள், உறவினர் முதலியோரும் இகழ்வர். உலகமெலாம் வசையுண்டாகும். உலகத்தாரெல்லாரும் பகைவராவர். இழிவு தரும் பொய்யரைப் பொய்யரும் சேரார். பொய்யர் உள்ளமும் அவர்களைப் பழிக்கும்.
  அங்கதம்-பொய். நரர்-உலகத்தார். அகிதர்-பகைவர்.
 

3

  அரும்பொய் வெளிப்படும் அழியும் அடைபயன்
199
ஏதேனும் பயன்வேண்டிப் பொய்சொல்லி
    னப்பொய்தா னெவ்வி தத்தும்
மாதரையில் வெளியாகும் அப்பொழுதப்
    பயனழியும் வளருந் துன்பஞ்
சாதலின்மை வேண்டிவிட முண்ணலொக்கும்
    பயன்கருதி சலமு ரைத்தல்
ஆதலினால் உண்மைதனைத் துணைக்கொள்ளி
    னெப்பயனு மடைவோ நெஞ்சே.
  ஒன்றை விரும்பிப் பொய் சொன்னால், அப்பொய் எப்படியும் வெளியாகும். அப்பொழுது கிடைத்த பொருளும் அழிந்து விடும். அதனால், துன்பம் மிகும். இச்செயல் சாவாமையை விரும்பி நஞ்சு உண்பதை ஒக்கும். உண்மையைக் கைக்கொண்டால் நிலையான எல்லாப் பயனும் அடைவோம்.
  பயன்-இன்பம். விடம்-நஞ்சு. சலம்-பொய்.
 

4

  பொய்யரை நம்பார் செல்லாப் பொருளுங்கொடார்
200
மெய்யரெனப் பெயர்பூண்டார் வறிஞரே
    யெனினுநிதி மிகவு மன்னார்
கையதனிற் கொடுத்துவைக்க எவருமஞ்சார்
    பொய்யரெனக் கவ்வை பூண்டார்
செய்யபொருள் மிகவுளா ரெனினுமவர்
    கையிலொரு செல்லாக் காசும்
அய்யமின்றி யொருவர்கொடா ரெனிற்படிறின்
    தன்மைதனை யறைவ தென்னே.