பக்கம் எண் :

97

  பொய்
 
  மெய்சொல்லின் நெஞ்சமே, எவ்வகையான துன்பமும் நேரிடாது.
  கைதவம்-பொய்.
 

1

  பொல்லாங்கு எவைக்கும் பொய்யே பிறப்பிடம்
197
இழுதைசொல்லி மறைக்கலா மெனுந்திடத்தாற்
    பாதகங்க ளெல்லாந் தீயர்
பொழுதெலாம் புரிதலாற் குற்றங்கள்
    யாவுக்கும் பொய்பி தாவாம்
வழுதொன்றை நீக்கிடிற்றீ வினைகளெலா
    நீங்கிடுநல் வண்மை யொன்றே
முழுதுமுண ரறிஞர்க்குத் தோழனா
    மவர்க்கதனான் மோச முண்டோ.
  பொய் சொல்லி மறைக்கலாமென்ற திடத்தால் தீயவர்கள் எப்பொழுதும் எல்லாப் பாவங்களும் செய்கின்றனர். அதனால், குற்றங்களுக்கெல்லாம் பிறப்பிடம் பொய் ஆகும். (கொடிய) பொய் ஒன்றை நீக்கிவிட்டால் தீமைகளெல்லாம் தாமே யகலும். மெய் ஒன்றே எல்லாமுணர்ந்த சான்றோர்க்கு நண்பனாகும். அதனால் அவர்களுக்குக் கேடு ஒன்றும் இன்று.
  இழுதை-பொய். வழுது-பொய். வண்மை-மெய்.
 

2

  பொய்யர் மறந்துமெய் புகலினும் மதியார்
198
அங்கதமே பொருளென்னக் கைக்கொண்டோர்
    மறந்தொருமெய் யறைந்திட் டாலும்
இங்கதனை யெவருநம்பார் துணைவியர்புத்
    திரர்தமரும் இகழ்ச்சி செய்வார்
அங்கணுல கெங்கணுமே வசையாடி
    நரரெலாம் அகித ராவார்
பங்கமுறும் பொய்யுரைப்பொய் யருஞ்சேரார்
    தம்முளமும் பழிக்கு மன்றோ.
 

நீ.-7