| நீதி நூல் |
| உயிரே எனவும் உறுதியாகக் கருதிப் பேணும் வேலையாட்கள் மறுமை இன்பம் எய்துவர். |
| அண்ணல்-தலைவன். தமர்-சுற்றத்தார். நண்ணலர்-பகைவர். |
| 6 |
| குறிப்பின்வழி யியற்றுங் குணமிக்கான் ஏவலன் |
195 | நாவியல் உணவில்ஏனை நல்வினை களில்நம் பிக்கு மேவிய விருப்பி னோடும் வெறுப்பினற் குறிப்ப றிந்து தாவிய லாது தக்க ததியில்யா வுஞ்செய் சேடர் ஆவியோ விழியோ எய்தற் கரும்பொனோ மணியோ யாதோ. |
|
| நாவுக்குச் சுவையான உணவு, வேண்டும் நன்மைகள் முதலியவற்றைத் தலைவனுக்குச் செய்யும்பொழுது தலைவனது விருப்பு வெறுப்பாகிய நிலை அறிந்து உற்றநேரத்துக்குறைவின்றி எல்லாம் செய்யும் வேலையாட்களை உயிரெனவோ கண்ணனெனவோ பொன்னெனவோ மணியெனவோ என்ன எனக் கூறுவது? |
| நம்பி-தலைவன். தா-குறைவு. ததி-உற்ற நேரம். |
| 7 |
| அதி. 15-பொய் |
| மெய்யே உரைக்கின் மேவா இடர்கள் |
196 | முன்னமோர் பொய்யுரைக்க வப்பொய்வெளி யாகாமல் மூடும் வண்ணம் பின்னுமோர் பொய்யுரைக்க வதையுநிலை நிறுத்துவோர் பெரும்பொய் சொல்ல இன்னவகை கைதவமொன் றிருநூறு கைதவத்துக் கிடமாம் வாய்மை தன்னையே முன்பகரிற் சங்கடமொன் றிலையதுவே தகைமை நெஞ்சே. |
|
| முதற்கண் சொன்ன பொய் வெளியாகாமல் மறையும்படி பல பொய் சொல்லல் நேரிடுகின்றது. இதனால், ஒரு பொய் சொல்லுதல் ஒரு நூறு பொய் சொல்லுவதற்கு இடமாகின்றது |