| தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் |
| முதலாளி நல்லவனாக இல்லாவிட்டால் அவனைவிட்டு விலகிவிடுதல் நல்லது. கூலிதரும் அவனோடு இருக்கும்வரையும் தன் வாழ்நாள் அவனுக்குரியதென்று கருதி அவன் சொல்வழி ஏவல் செய்வது முறை. |
| தலைவன்-முதலாளி. விலை-கூலி. சேடர்-வேலையாளர். உனி-கருதி. |
| 4 |
| எல்லா நலமும் இயைந்தவர் ஏவலர் |
193 | அறநெறி யலாத செய்கை யாண்டகை சொல்லிற் கேளார் புறமுற வவன்குற் றத்தைப் புகன்றிடார் பொய்க ரத்தன் மறமிலா ரவனை யன்னை தந்தைபோன் மதிக்கும் நீரார் இறவிலாக் கடவுள் வாழும் இதயத்தார் சேட ரம்மா. |
|
| தலைவர் முறையல்லன கூறின், அதனைக் கேளார். தலைவர் குற்றத்தை யாரிடமும் சொல்லார். பொய், மறைப்பு, முதலிய தீமையில்லார். தலைவரைத் தாய்தந்தைபோல் எண்ணுந் தன்மையர், என்றும் அழியா இறைவன் நின்று நிலவு நெஞ்சினர், வேலையாட்கள். |
| ஆண்டகை-தலைவன். கரப்பு-மறைப்பு. சேடர்-வேலையாட்கள். |
| 5 |
| தலைவன் பகைநண்பு தமக்கும் பகைநண்பே |
194 | அண்ணல்தன் தமரை யண்ணல் என்னவும் அவனொன் னாரை நண்ணல ரெனவு மன்னான் நண்பரை யினிய ரென்றும் எண்ணற வன்னோன் கொண்ட பொருளெலாஞ் சீவ னென்றும் திண்ணமா வெண்ணிப் போற்றுஞ் சேடர்விண் ணாட ராவார். |
|
| தலைவன் சுற்றத்தாரைத் தம் தலைவனே யெனவும், அவன் பகைவரைத் தம் பகைவரெனவும், அவன் நண்பரை இனியரெனவும், அவனுடைய அளவில்லாத பொருளெல்லாம் தம் |