| நீதி நூல் |
| குடிகள், மாணாக்கர், வீட்டுவேலை செய்வோர், தச்சர், நாவிதர், வண்ணார், வேலையாட்கள் முதலிய பல தொழிலாளர்கள் எல்லோரும், தம்மை ஆதரித்து ஆளும்பொருட்டு அழியாக் காப்பணிந்து முன்வரும் உயர்ந்தோர் சொல்லுக்கு அடங்கித் தாம் செய்யும் பெருமை மிக்க தொழிலெலாம் வஞ்சமின்றிச் செய்தால் இம்மையின்பமும் மறுமையின்பமும் எளிதாகா அடைவர். |
| காழியர்-வண்ணார். ஆளுபாக்கு-ஆளும்பொருட்டு. குடிலம்-வஞ்சனை. மாது-பெருமை. |
| 2 |
| உணவு தருவோர்க்கே உடம்பு பொருளாம் |
191 | ஐயன தருளான் மெய்மை யனைதந்தை யீந்தா ரம்மெய் உய்யவூண் யசமா னன்றான் உதவலா லவற்கே தம்மெய் ஐயமில் பொருளென் றுன்னி யன்பொடு மேவ லாளர் மையறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ. |
|
| கடவுள் அருளால் உடம்பை அன்னையும் அத்தனும் ஈந்தனர். அவ்வுடம்புக்கு வேண்டும் உணவை வேலை வாங்குகின்றவர் (முதலாளி) தருகின்றனர். ஆதலால். வேலை செய்கின்றவர்கள் தம் உடம்பு, உணவு தரும் முதலாளிமாருக்கு உடைமையென்று கருதி உண்மையான அன்புடன் உழைக்கவேண்டும். |
| மெய்-உடம்பு. பொருள்-உடைமை. புரிவர்-விரும்பிச் செய்வர். |
| 3 |
| இணங்காத் தலைவனைவிட் டேகல் நன்று |
192 | தலைவன்றீ யவனே லன்னான் தனைவிடுத் தேகல் நன்றாம் விலைதரு மவன்பால் வைகி விரவுறுங் காறுஞ் சேடர் உலைவில்தம் வாழ்நா ளன்னாற் குரியதென் றுனிய வன்சொல் நிலையுறப் பணிகள் செய்து நெறிவழி நிற்றல் சீரே. |
|