| அதி. 14 |
| தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் |
| படைப்பெலாம் பார்க்கில் பெரிதும் சிறிதுமாம் |
189 | விரிசு டர்க்கதி ரோன்மதி தாரகை விலங்கு பக்கி மரமலை யாவினும் பெரிது சின்னதென் றாகிய தன்மைபோற் பிழையி லான்வகுத் திட்ட வுலகியல் திரித லின்றி நடப்பதற் காகவே சிறியர் மேலவ ரென்னவிங் காயினார் உரிய விம்முறை யின்படி தாழ்ந்தவ ருயர்ந்த வர்க்குள் ளடங்க லொழுக்கமே. |
|
| பேரொளியைப் பரப்புகின்ற ஞாயிறு, திங்கள், விண்மீன், நாற்காலின, பறவை, மரம், மலை முதலிய எல்லாவற்றினும் பெரியதும் சிறியதும் ஆகிய வேறுபாடுகள் படைப்பின் இயற்கையிலேயே அமைந்திருப்பன போன்று மக்களுள்ளும் உலகியல் நடத்தற் பொருட்டு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் முறைமையும் அமைந்துள்ளது. ஆதலால் தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கடங்கி வாழ்தல் நல்லொழுக்கமாம். |
| தாரகை-விண்மீன். விலங்கு-நாற்காலின. பக்கி-பறவை. |
| 1 |
| காப்போர் சொல்லுக்கு அடங்கல் கடமை |
190 | குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் அடிய ரேமுதற் பஃறொழி லாளர்கள் அனைவ ருந்தமை யாதரித் தாளுபாக்கு ஒடிவில் கங்கணம் பூண்டுகொண் மேலவர் உரைக்க மைந்துத மாது தொழிலெலாங் குடில மின்றி யியற்றிடி லிம்மையும் கோதி லம்பர மும்பெறு வாரரோ. |
|