பக்கம் எண் :

102

 நீதி நூல்
 
  விரிந்து உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பில்லாத முழுமுதல்வனுடைய சினத்துக்கு அஞ்சாது, நல் அறிவில்லாத கீழோர்க்கு அஞ்சிப் பொய் கூறுதல், தெய்வத்தினும் மக்கள் மேன்மையுள்ளவர் என்று நினைத்து நடப்பதை ஒக்கும்.
  வியன்-விரிந்த. வீற்றிருக்கும்-சிறப்புடனிருக்கும். ஓர்-ஒப்பில்லாத. முனிவு-சினம். அநுத்தம்-பொய். கயம்-மேன்மை.
 

11

  அதி- 16--களவு
  நினைத்தல் செய்தல் நிறையிற் குறைவுங் களவே
208
களவு செய்குதன் மனத்தினில் நினைக்குதல் கவரென்று
உளம கிழ்ந்துப தேசித்தல் உதவிசெய் தொழுகல்
வளமி லாப்பொருண் மாறுதன் மிகுவிலை வாங்கல்
அளவி னும்நிறை தனினும்வஞ் சித்தப கரித்தல்.
  களவு செய்தல், செய்ய நினைத்தல், செய்யென்று வழி சொல்லிக் கொடுத்தல், துணைபோதல், பழுதான பொருளை விற்றல், கூடின விலை வாங்குதல், அளத்தல் நிறுத்தல் முதலியவற்றில் ஏமாற்றிக் கொள்ளையிடல் களவின்பாற் படுவன.
  கவர்-களவுசெய்.
 

1

  பேராசை கூலி குறைத்தல் பெருங் களவே
209
கண்டெ டுத்தவோர் பொருளனு பவித்தலுங் களவின்
பண்டம் வாங்கலும் வாங்கிய கடன்கொடாப் பழியும்
மண்டும் வண்பொரு ளாசையாற் பொய்வழக் கிடலுந்
தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும்.
  கண்டெடுத்த பிறன்பொருளைக் கொண்டு துய்த்தலும், களவு முறையாக நுகர்பொருளை வாங்கலும், பெற்ற கடனைத் திரும்பக் கொடாமையும், பேராசையால் இல்லாத வழக்கைத் தொடர்தலும், கூலியைக் குறைத்துக் கொடுத்தலும் களவாம்.
 

அனுபவித்தல்-துய்த்தல்; அழுந்தியறிதல்.

  2