| பன்னெறி |
| இதுவுமது |
| எல்லா நெறியினும் சிறந்தது இறைநினைவே |
535 | முன்னவன் பொற்பத முன்ன முன்னலுந் தன்னுயி ரெனப்பல உயிரைத் தாங்கலும் பன்னெறி யாவினும் பளகி லாவரு நன்னெறி யாமென நவிலும் வேதமே. |
|
| உலகுயிர்க்கு ஆதியாயுள்ள முழுமுதல் கடவுளின் பொன் போலும் திருவடிகளை நினைவு சொல் செயல் இவற்றைத் தொழில்படுத்தத் தொடங்குங்கால் முதற்கண் நினைத்துத் தொடங்குதலும், எழுவகைப் பகுப்பில் காணப்பெறும் எல்லாவுயிர்களையும் தன் உயிர்போல் பேணிக் காத்தலும், பலவாகச் சொல்லப்பெறும் ஒழுக்க நெறிகளுள் எவ்வகைக் குற்றமுமில்லாத நல்லொழுக்க வழியாம் என்று மறையே எடுத்து மொழியும் |
| முன்னம்-முதற்கண். பளகு-குற்றம். நவிலும்-எடுத்து மொழியும். வேதம்-மறை. |
| 12 |
| வாழி |
536 | ஆதிநூ லென்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க வேதியர் நாளும் வாழ்க மெய்யடி யார்கள் வாழ்க தீதிலாங் கிலேய மன்னர் செங்கோலெஞ் ஞான்றும் வாழ்க நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ. |
|
| `வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்ழு திருவுள்ளங்கொண்டு அறவோரின் உள்நின்றுணர்ந்த அவர்கள் வெளிப்பட மொழிந்தருளிய முதல்நூல் எந்நாளும் வாழ்க. அந் நூலானும் உலகோர் அடிப்பட்டு ஒழுகிவரும் ஒழுக்கத்தானும் நின்று நிலவும் நல்லறம் நாளும் வாழ்க. அந் நூலையும் ஒழுக்கத்தையும் மேற்கொண்டு உணர்ந்து ஒழுகியும், உணர்த்தியும் ஒழுக்கியும் வரும் மறையவர் எந்நாளும் வாழ்க. உலகம் பசி பிணியற்று வசியும் வளனும் செறிந்து நலிவின்றி நாளும் நலமுறவாழ `முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்ழு நிறைவுடன் வாழ்க. பத்தர் இனத்துப் பித்தாய் ஒழுகும் மெய்யடியார்கள் வாழ்க. இந்நீதிநூலை முறையாக அன்புடன் நாளும் ஓதுவோர் கேட்போர் ஒழுகுவோர் எந்நாளும் வாழ்க. |
| 13 |
| --------- |