பக்கம் எண் :

262

  நீதி நூல்
 
 
வறியரெம் மிற்பல் லோரிவ்
   வையகத் துளர்தே வீந்த
சிறிதுமே பெரிதென் றெண்ணிச்
   சிந்தையே மகிழ்ந்து கொள்ளே.
  மனமே! உலகில் பறவையும் விலங்கும் பசிவந்த பின்னரே இரைதேடும். இரை எடுத்தபின் நாளை வேண்டுமென்ற நினைப்போ சேர்த்து வையாதது குறையென்னுங் கவலையோ கொள்வதில்லை. அவைகள் உணவில்லாமலும் இறந்ததில்லை. நம்மைவிட எளியவர் பலர் இருக்கின்றார்கள். கடவுள் நமக்கருளிய பொருள்கள் சிறிதே எனினும் அவற்றையே பெரிதாக எண்ணி மகிழ்ச்சியுறுவாயாக.
  தேவு-கடவுள்.
 

10

  வேதாந்தம்
  கற்பனை பத்தும் கைக்கொள்வோர் கடவுளைச் சார்வர்
534
ஈசனையே திதித்தலவன் திருநாமத்
   தொடுதிருநா ளினைக்கொண் டாடல்
நேசமா ரனைதந்தை வணங்கல்கொலை
   செய்யாமை நிதங்கா மத்தை
நாசமாக் குதல்களவு பொய்நீக்கல்
   பிறனில்மது நயந்தி டாமை
மாசறுமிவ் விதிபத்தும் வேதாந்த
   மெனக்கடவுள் வகுத்திட் டானால்.
  கடவுள் தன் திருவடியை அடையும் மெய் அன்பர்கள் இன்றியமையாது கைக்கொண்டொழுகி உய்யவேண்டி அருளிய கட்டளைகள் பத்தென்ப. அவை: கடவுளை வணங்கல், அவன் திருப்பெயரையும் திருநாளையும் தனித்தனி கொண்டாடுதல், அன்புமிக்க தாய்தந்தையரை வணங்குதல், கொலை செய்யாதிருத்தல், பரத்தைமை கொள்ளாதிருத்தல், களவு செய்யாதிருத்தல், பொய் சொல்லாதிருத்தல், பிறன்மனை விழையாதிருத்தல், கள்ளுண்ணாதிருத்தல் என்பன. இவற்றையே மறைமுடிவாகிய வேதாந்தம் என்பர்.
  காமம்-பரத்தைமை; தப்புநடை.
 

11