| பன்னெறி |
| கைம்மாறு வேண்டாக் கடப்பாடுள்ள கரிய பெரிய மழை உயிர்களுக்குத் தீங்கு பயப்பதாகிய இடியையும் மின்னலையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு, நன்மை பயப்பதாகிய தண்ணீரையே தருகின்றது. அதுபோன்று நல்லவர்களும் கண்டதும் கேட்டதும் அவ்வாறே கூறிவிடாது, பிறருக்குத் துன்பந்தரும் வன்சொல் நீக்கி நன்மைதரும் இன்சொல்லையே சொல்லுவர். |
| உரும்-இடி. மின்-மின்னல். உதகம்-தண்ணீர். பருவரல்-துன்பம். வசனம்-சொல். |
| 8 |
| பொழுதறிந்து புகறல் |
| கொள்வன கொண்டு கூறுவர் பொழுதறிந்து |
532 | நதிமுதற் புகுவ தெல்லா நன்ககட் டிடைய டக்கும் அதிர்கட லெனவு மீயா ரருத்தமஞ் சிகையே போலும் வதிசெவி நுழைவ தெல்லா மனத்தினு ளடக்கித் தக்க ததியறிந் துரைப்ப தன்றிச் சகலர்க்கு முரையார் மிக்கோர் |
|
| கடல் யாறு முதலியவற்றின் வழியாக வரும் நீர்களை எல்லாம் தன் அகத்தே அடக்கிவைத்துக்கொள்வது போலவும், ஈயாதவர்களுடைய பணப்பெட்டி போலவும் செவிவழியாக நுழைவதை மனத்தகத்து அடக்கி வைத்துத் தக்க நேரம் தெரிந்து பெரியோர் சொல்வது அல்லாமல் எக்காலத்தும் எவர்க்கும் வீணாக எடுத்துரைக்கமாட்டார். |
| நதி-யாறு. அகடு-வயிறு; நடுஇடம். அருத்தம்-பணம். மஞ்சிகை-பெட்டி. வதி-வழி. ததி-தக்கநேரம். சகலர்க்கும்-எல்லார்க்கும். மிக்கோர்-பெரியோர். |
| 9 |
| அகநிறைவு |
| ஆண்டவன் அருளியது பெரிதென மகிழ்க |
533 | பறவையும் விலங்குந் தீனி பசித்தபின் தேடும் நாளைக் குறையெனுங் கவலை யில்லை யுணவின்றி யிறந்த தில்லை |
|