| நீதி நூல் |
| உலோபர் பொருள் |
| இவறியான் செல்வத்தை எல்லாரும் தமதென்பர் |
530 | தமதென உலோப ரீட்டுந் தனத்தினைக் கொடுங்கோல் மன்னர் எமதென இருப்பர் கள்வர் எமதென்பர் கிளைஞ ரெல்லாம் உமதெம தெனவா திப்பர் உலகென தென்னும் யாமும் எமதென்போம் பாரந் தாங்கி நலிவதென் பிசின ரம்மா. |
|
| இவறன்மையுடையோர் தேடித் தொகுத்து வைத்துள்ள பொருளினைக் கொடுங்கோல் மன்னர் தமது என்று இருப்பர். கள்வர் ழுஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்ழு என்பதனால் தமதென்பர். உறவின் முறையாரும் ஈட்டியவன் மாண்டொழிந்தால் உமக்கும் நமக்கும் பங்காகும் என்று தமதென்பர். உலகமும் தமது என்னும். யாமும் நமது என்போம்* இந்நிலையில் அவ் இவறி வீண் சுமையாகப் பொருளைச் சுமந்து துன்புறுவது எதன்பொருட்டு? |
| பிசினர்-இவறன்மையுடையார். இவறி-உலோபர். |
| 7 |
| கொடுஞ்சொற் கூறாமை |
| நல்லோர் இன்சொல் மழைபோல் நவில்வர் |
531 | உருமைமின் னினைத்தன் பாற்கொண் டுதகமன் னுயிர்க்கு நல்குங் கருமுகி லெனக்கண் ணாலென் காணினுங் கேட்பி னுஞ்சூழ் பருவர லேதி லார்க்குப் பயக்கும்வன் சொல்லை நீத்து மருவிய நலங் கலந்த வசனமே பகர்வர் நல்லோர். |
|
| *எனதென. நாலடியார் 276 |